தேடல் தொடங்கியதே..

Monday, 15 July 2013

துபாயில் 'சென்னை புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (NCIM) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

சென்னை 'புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (NCIM) பயிலகத்தில், (கடந்த 2000 - 2002 ஆம் ஆண்டில்) M.B.A., முதுகலை பட்டம் பெற்று, துபாயில் பணி புரியும் நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த வாரம் துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் சிறப்பாக நடை பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள், தாங்கள் பயின்ற காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். தற்போது பணியாற்றும் நிறுவனம்  மற்றும் தங்கள் வாழ்க்கை முறையை பற்றி பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கீழக்கரையை சேர்ந்த ஜமீல் முஹம்மது, அப்துல் பாஸித்,  ஹமீது இர்பான், ஹபீல், அஹமது ஹுசைன், அஹமது சுஹைல், சென்னையை சேர்ந்த முஹம்மது அல்தாப், அப்ரோஸ் அஹமது, அதிராம்பட்டினம் முஹம்மது நெய்னா  உள்ளிட்ட நண்பர்கள் பலர் பங்கேற்றனர். 

மேலும் உலகெங்கும் வாழும் தங்கள் சக நண்பர்களை ஒருங்கிணைத்து, விரைவில் ஒரு மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சியை, துபாயில் நடத்தி, பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனையும் நடை பெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நண்பர். ஜமீல் முஹம்மது ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

No comments:

Post a Comment