தேடல் தொடங்கியதே..

Friday 26 July 2013

கீழக்கரை நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து தமுமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்தும், முறையான குடிநீர் வழங்க கோரியும், தமுமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (26.07.2013) வெள்ளிக் கிழமை மதியம், ஜும்மா தொழுகைக்குப் பின்னர், 2 மணியளவில் கீழக்கரை முஸ்லீம் பஜார், லெப்பை மாமா டீக் கடை முன்னதாக நடை பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, நகராட்சி நிவாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 




இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர். மண்டலம் ஜெய்னுலாபுதீன், தமுமுக  நகர் தலைவர் சிராஜுதீன், தமுமுக மூத்த தலைவர். அன்பின் ஹசன், 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாஹீம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்தஆர்ப்பாட்டத்தின் முடிவில் பின் வரும் ஆறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, மமக திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகு தாவூது சாதிக், மமக துணை செயலாளர் புகாரி, PRO கமால் நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


முதல் தீர்மானத்தை வளைகுடா நிர்வாகி நண்பர்.கீழை இர்பான் அவர்களும், இரண்டாம் தீர்மானத்தை தமுமுக துணைத் தலைவர் கோஸ் முஹம்மது அவர்களும், மூன்றாம் தீர்மானத்தை தமுமுக துணை செயலாளர் பவுசுல் அமீன் அவர்களும், நான்காம் தீர்மானத்தை மமக நகர் செயலாளர் இக்பால் அவர்களும்,

ஐந்தாம் தீர்மானத்தை தமுமுக வணிக அணி செயலாளர். சலீம் அவர்களும், ஆறாம் தீர்மானத்தை தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் அவர்களும் எழுச்சியுடன் வாசித்தனர். இந்த ஆர்பாட்ட முடிவில் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அன்வர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

2 comments:

  1. இந்த ஆர்ப்பாடம் நடத்த தமுமுகவினர்க்கு என்ன தகுதி இருக்கிறது ஆபிதா டிச்சரை நம்பவைத்து கழுத்தைஅருத்த கூட்டம் காதரியா வெற்றி பெறுவதற்க்கு வழிவகுத்த கூட்டம்

    ReplyDelete
  2. இந்த ஆர்ப்பாடம் நடத்த தமுமுகவினர்க்கு என்ன தகுதி இருக்கிறது ஆபிதா டிச்சரை நம்பவைத்து கழுத்தைஅருத்த கூட்டம் காதரியா வெற்றி பெறுவதற்க்கு வழிவகுத்த கூட்டம்

    ReplyDelete