தேடல் தொடங்கியதே..

Wednesday 31 July 2013

கீழக்கரை பழைய குத்பா பள்ளியில், வருடம் தோறும் நடைபெறும் 'கியாமுல் லைல்' பின்னிரவுத் தொழுகை - இஸ்லாமிய பெருமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுகோள் !

கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசலில், வருடம் தோறும் ரமளானின் கடைசி பத்து தினங்களிலும், 'கியாமுல் லைல்' என்று அழைக்கப்படும் சிறப்பு பின்னிரவுத் தொழுகை நடை பெற்று வருகிறது. இந்த 'கியாமுல் லைல்' தொழுகை, சரியாக இரவு 2.15 மணிக்கு துவங்கி, இரவு 3.15 மணிக்கு வித்ரு தொழுகையுடன் நிறைவடைகிறது.  

எல்லா நாட்களிலும், இந்த 'கியாமுல் லைல்' தொழுகையை தனித்தும் அல்லது ஜமாத்துடனும் தொழலாம். எனினும், ரமழான் மாதத்தில் இந்த தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. 'யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர் நோக்கியும் தொழுகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. 



ரமளானின் இந்த கடைசி பத்து தினங்களில் வரும் ஒற்றைப் படை இரவுகளில், 'லைலத்துல் கத்ரு' எனும் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

ஆகவே எதிர் வரும் பத்து நாள்களின் பின்னிரவுகளிலும், இந்த புண்ணியமிக்க, இரவை தேடும் நாம் 'கியாமுல் லைல்' போன்ற அழகிய வணக்க வழிபாடுகளின் மூலம் இறைவனின் அன்பையும், அருட்கொடைகளையும் அளவில்லாமல் பெற முயற்சிக்க வேண்டுமாய் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment