தேடல் தொடங்கியதே..

Sunday, 29 September 2013

கீழக்கரையில் நடை பெற்ற 'மழைத் தொழுகை' - இஸ்லாமிய மக்கள் திரளாக பங்கேற்பு !

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் இன்று (29.09.2013) காலை 8.30 மணியளவில் மஹதூமியா பள்ளி வளாகத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. குத்பா உரையாற்றி மழை தொழுகையை பழைய குத்பா பள்ளி தலைமை இமாம் S.R.M.ஹைதர் அலி மன்பஈ அவர்கள் நடத்தினார். 

 

 தொழுகை முடிவில் மாவட்ட தலைமை காஜி மௌலானா மவ்லவி V.V.A.சலாஹுத்தீன் அவர்கள், மழை பொழிவை எதிர்நோக்கி உருக்கமாக துஆ செய்தார். இதில் கீழக்கரை நகர் இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு இறைவனை இறைஞ்சினர். பெண்கள் தொழுவதற்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்ததால்,பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர்.இந்த தொழுகையில் கீழக்கரை நகரில் உள்ள அனைத்து ஜமாத்தினரும் திரளாக பங்கேற்றது  மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது. 

2 comments:

  1. நன்மைகளை செய்து துவா செய்திருந்தால் மிகவும் நன்மையா இருதிற்க்கும், முதலில் ஜமாஅத் நிர்வகம் தங்களின் உள்ள குறைகளை சரி செய்து கொள்ள முன்வர வேண்டும் , ஜமாஅத் மக்களின் முனேற்றதிருகும் , நல்ல கலாசாரத்திற்கும் உண்மையாக பாடுபட வேண்டும் , பெண்களின் சாபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் , தேங்கி கிடக்கும் பெண்களின் மனுக்களை விசாரித்து அவர்களுக்கு உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் ,ஜமாஅத் நிர்வாகம் தொடர்ந்து பாவம்களை செய்து கொண்டு துவா செய்வதில் ஏதும் நன்மைகள் இருக்குமா ?

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சா29 September 2013 at 22:41

    மாஷா அல்லா. நாம் நாடியபடியே நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. எல்லாப் புகழும் படைத்த ரப்பில் ஆல்மீனுக்கே.பெண்களின் பங்களிப்பு போற்றுதலுக்கு உரியது.

    பெண்களுக்கு தனி இட வசதி,தொழுகைக்கான விரிப்புகள். முதியோருக்கும், முடியாதவர்களுக்கும் இருக்கை வசதி,குடிக்க தண்ணீர் பாக்கெட் போன்றவைகளை அழைப்பாளர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.கூடுதலாக நிகழ்ச்சியை சிறப்பிக்க வருகை தந்த பெரு மக்களை, தன் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவர்களை அழைப்பது போல் நிர்வாகத்தினர் இன்முகத்துடன் வாயிலில் வரவேற்றது குறிப்பிட தக்க ஒன்று. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete