தேடல் தொடங்கியதே..

Friday 4 October 2013

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களை கண்காணிக்க 'கண்காணிப்பு கேமரா' !

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். வகுப்பறையில் மாணவர்களின் நடத்தை, பாடங்கள் கற்பிக்கும் போது அவர்களின் நிலை குறித்து அறியும் வகையில் பள்ளியில் 19 இடங்களில் கேமரா (ஆண்கள் பிரிவில் எட்டு கேமரா, மெயின் பிளாக்கில் 11 கேமராக்கள்) பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.



இதனை பள்ளியின் தாளாளர் டி.எஸ்.ஏ. ஹமீது அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சகர்பானு முன்னிலை வகித்தார். புதுப்பள்ளி இமாம் மன்சூர் அலி அவர்கள் துஆ ஓதினார்.

இது போன்ற கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதால் மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் முடியும் என்று ஹமீதியா மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகள் கண்காணிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் என்றும் இதனை தொடர்ந்து பெற்றோர்களுக்கு, பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை குறித்து எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இதை போல் அனைத்து பள்ளிகளிலும் செயல்முறை படுத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சா4 October 2013 at 21:38

    அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்கிறார்கள். நம்தூரில் அரிதாக கிடைக்கும் பாடப் புஸ்தகங்களை தருவித்து கொடுக்க மாட்டார்கள். ஆனால் எளிதாக கிடைக்கும் நோட்டுகளை தருவித்து கூடுதல் கட்டணத்தில் கட்டாயப்படுத்தி விற்பார்கள் மாணவிகளுகு திடீரென்டு ஏற்படும் அசவுகரியம் காரணமாக விடுப்பு.கடிதம் கொடுக்க தவறினால் ரூபாய்.200/= அபராதம் வசூலிப்பார்கள்.மேலும் விடுப்பு கடிதம் மாணவிக்கு பதிலாக பெற்றோர் குறிப்பாக பெண்கள் ஆட்டோவுக்கு 80,100 செலவழித்து நேரிடையாக போய் கொடுத்தே ஆக வேண்டும். பீ.டி. ஏ. கூட அஞ்சும் அளவுக்குஅவர்கள் தனி காட்டு ராஜா ராணிகள். ஆகையால் எதுவும் சாத்தியமே. இதன் பின் விளைவுகள் எஸ்.எம்.டி; சி.ஏ.எஸ் டவுன் பஸ்க்கு ஏற்பட்ட நிலை தான் ஆகும்

    ReplyDelete
  3. கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பாராட்ட கூடிய நல்ல திட்டம், இது போன்று கீழக்கரையில் அணைத்து பள்ளியில், மாணவர் ஆசிரியர்கள்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருதபட வேண்டும் , கீழக்கரையில் அணைத்து பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு மாணவர்களின் ,பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த! வேண்டும்

    ReplyDelete