தேடல் தொடங்கியதே..

Thursday 3 October 2013

கீழக்கரையில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கம் முயற்சி !

கீழக்கரை நகரில் வாகனங்களின் பெருக்கத்தால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வள்ளல் சீதக்காதி சாலை, முஸ்லீம் பஜார் வங்கி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் பெரும் துயரம் அடைந்து வருகின்றனர். நகரின் பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்கள் காலம் நேரம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்து பல நேரங்கள் ஸ்தம்பிக்கிறது. கீழக்கரையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் "நோ பார்க்கிங்" விதி முறைகள் வாகன ஒட்டிகளால் கடை பிடிக்கப்படுவதில்லை.



இந்நிலையில் கீழக்கரையில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த கோரி, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. 


2 comments:

  1. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
    கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆகியா பகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும், இதனால் அதிகம் அளவில் ஆட்டோகள் பெருகுவதை கட்டுபடுத்த முடியும் , இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மாற்ற வேண்டும் , ஓட்டுனர் உரிமை இல்லாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுபவரிடம் கடுமையான அபராதம் தொகை வசூல் செய்தல் சிறியவர்கள் அதிகபேர் இருசக்கரம் வாகனம் பயன் படுத்துவதை குறைக்கலாம் ,

    ReplyDelete
  2. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
    கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

    ReplyDelete