தேடல் தொடங்கியதே..

Saturday 5 October 2013

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்த 'அபாய மின் கம்பம்' அகற்றப்பட்டது !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் அருகாமையில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று இருந்து வந்தது. பள்ளி சிறுவர்களும், பொது மக்களும் அதிகம் நடமாடும் இந்த சாலை விழும் நிலையில் இருந்த, இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றக் கோரி பல்வேறு பொது நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், மின் துறையினருக்கு புகார் மனு அளித்து வந்தனர். 


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ வரும் லிங்கை சொடுக்கவும் 

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் - உயிரிழப்புகள் ஏற்படும் முன் சீர் செய்யப்பட 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கோரிக்கை கடிதம் !


இந்நிலையில் நேற்று முன் தினம்  'ஒரு லாரி', இந்த மின் கம்பத்தில் மோதியதில் மேலும் முறித்து விழும் நிலையில் இருந்தது. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இந்த கம்பத்தை, இனியும் தாமதிக்காமல் மாற்ற மேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.அதன அடிப்படையில் பல வருடங்களாக சமூக ஆர்வலர்களால் இந்த இடத்தில் 'புதிய மின் கம்பம்' வேண்டி நடை பெற்ற போராட்டத்தை 'ஒரு லாரி' நிறைவேற்றி தந்துள்ளது.


இதனையடுத்து சேதம் ஏற்படுத்திய லாரி உரிமையாளர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்த மின்சார வாரியம், இன்று (05.10.2013) இந்த அபாய மின் கம்பத்தை மாற்றி, அந்த இடத்தில்  புதிய மின் கம்பம் பொருத்தி வருகிறது. இதனால் தற்போது கீழக்கரை பகுதியில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

இது குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக நிர்வாகி. சமூக ஆர்வலர். செய்யது இபுறாகீம் அவர்கள் கூறும் போது " இந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி பலமுறை மின்சார வாரியத்தினரிடம் புகார் செய்துள்ளோம். 

தற்போது இதற்கு ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புகார் மனுக்களால் முடியாததை, லாரி முடித்து வைத்து விட்டது. நல்ல வேலையாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பழுதடைந்த மின் கம்பங்கள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்களிடம், கடந்த 2010 ஆம் ஆண்டு,  முறையீடு செய்தோம்.

அதற்கு கீழக்கரை நகரில் 585 மின் அளவிகள் பழுதான நிலையில் உள்ளதாகவும், இவை விரைந்து மாற்றப்படும் என்றும் மின்சார வாரியம் பதில் தந்து மூன்றாண்டுகள் முடிவடையப் போகிறது. இன்னும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கீழக்கரை நகருக்குள் இது போன்ற இன்னும் பல அபாயகரமான மின் கம்பங்கள் காணப்படுகிறது. அவை அனைத்தையும், ஒரு லாரி வந்து இடித்த பிறகு மாற்றுவதற்கு முனையாமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்ற மின்சார வாரியம் முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.


1 comment:

  1. கீழக்கரை நகருக்குள் இது போன்ற இன்னும் பல அபாயகரமான மின் கம்பங்கள் காணப்படுகிறது. அவை அனைத்தையும்,பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்ற மின்சார வாரியம் முன் வர வேண்டும்." பழைய வயர்களும் மாற்றி அமைக்க வேண்டும் .

    கீழக்கரை மக்கள் தங்களில் வீடு கூரைல் சோலார் பேனல் அமைத்து அதன் மூலம் வீட்டின் உபயோகத்திற்கான மின்சாரத்தினை பெற முன் வர வேண்டும் ! அரசங்கம் மானியதோடு குறைந்த முதல்ழிடில் சோலார் பேனல் அமைத்து அமைத்து கொள்ளலாம் , ஒரு முறை முதழிடு , ஆனால் வாழ்நாள் முழுவதும் இலவசம் மிசாரம் கிடைக்கும்,

    ReplyDelete