தேடல் தொடங்கியதே..

Thursday, 3 October 2013

கீழக்கரை நகராட்சியில் ஊழலுக்கு துணை போகும் வெட்கக்கேட்டை கவுன்சிலர்கள் கை விட வேண்டும் - துணை சேர்மன் வேண்டுகோள் !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவரும், கீழக்கரை நகராட்சி துணை தலைவருமான ஜனாப். ஹாஜா முஹைதீன் அவர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 5 பக்கங்கள் கொண்ட தெளிவுரை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதில் மத்திய மாநில அரசுகள் வழங்கிய நிதிகள் அனைத்தும் வீனடிக்கப்படுவதாகவும், நகர் மன்ற தலைவரின் கணவர் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், 


நியமனக் குழு, ஒப்பந்த குழு, வரி விதிப்பு குழு போன்ற நகராட்சி சட்ட விதிமுறை குழுக்கள் திட்டமிட்டு  நிராகரிக்கப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் '40 தொகுதிகளும் நமக்கே' என்று முழங்கி வரும் அ.தி.மு.க கட்சியினர், கீழக்கரை மக்களிடம் சென்று ஒட்டு கேட்க முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆகவே கீழக்கரை நகராட்சியில் ஊழலுக்கு துணை போகும் வெட்கக்கேட்டை கவுன்சிலர்கள் அனைவரும் கை விட்டு மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.  'மாதிரி' கொள்ளை இரசீது 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete