தேடல் தொடங்கியதே..

Saturday 7 September 2013

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி !

கீழக்கரை  ஹமீதியா தொடக்கப் பள்ளியில் 05.09.2013 அன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி தாளாளர் ஜனாப். M.S. எஹியா அவர்கள் தலைமை ஏற்று இருந்தார். சிறப்பு விருந்தினராக ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஞான கலாவதி அவர்கள் கலந்து கொண்டார். பள்ளியின் ஆசிரியை திருமதி S. செய்யது ராவியத்துல் அதபியா வரவேற்புரை நிகழ்த்தினார்.




ஆசிரியர் திரு G. ராஜ் பரணீதரன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியை வாழ்த்துரை வழங்கினார். துரோணாச்சாரியார் விருது பெற்ற பள்ளியின்  தலைமை ஆசிரியை ஜனாபா. ஹமீது நிஷா அவர்களுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை  தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் பேச்சுப் போட்டி, கவிதை, மாறுவேட போட்டிகள் என்று தங்கள் பான் முக திறமைகளை வெளிப்படுத்தியதோடு, ஆசிரிய பெருந்தகைகளை பெருமைப் படுத்தினர். போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. தலைவர் அவர்களால் இம்மாத STAR OF THE MONTH சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.  பள்ளியின் ஆசிரியை திருமதி N.A. அஸ்வத் ஹலிமா நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் சங்க மேலாளர் மற்றும் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

3 comments:

  1. ஜமாஅத் பள்ளிகூடங்களில் அந்த ஜமாத்தை சேர்த்த படித்த ஆண் , பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்ட்டும்
    சீனாவில் பள்ளிகூடங்களில் ஆனைத்து வகுப்புகளில் கைத்தொழில்கள் கற்று கொடுகபடுகிறது , இதனால் மாணவன் பள்ளி படிப்பு முடித்த உடன் சுயமாக தொழ்லில் செய்து பிழைத்து கொள்கிறான், அனால் நமது கல்வி முறைகள் வரலாறுகள் மற்றும் நிரம்பியதாக உள்ளது , இது நாளை அந்த மாணவனுக்கு சோறு போட போகுதா ? நமது பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு முடித்த ஆளவு கைத்தொழில் கற்று கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுக்கும் திறனை ஆய்யு செய்ய வேண்டும் , திறமை
    இல்லாத ஆசிரியர்களை பள்ளில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் , இல்லாவிடில் , மாணவர்களின் எதிகாலம் கெட்டுவிடும் ,

    ReplyDelete
  3. நமது ஊரில் பட்டம் படித்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் , அவர்கள் படித்த படிப்பின் மூலம் ஏதும் பயன் உண்ட ? என்றல் உண்மைகள் எந்த பயனும் இல்லை , அவர்கள் பெற்ற பட்டத்தின் மூலம் தமது குடும்பத்தில் உள்ள ஏழ்மை போக்கவோ , அல்லது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணத்தினை சமதிபதற்கோ வழி இன்றி விழி பிதிங்கி நிற்கின்றார்கள் , அவருகளுக்கு ஊரில் வருமனதைனை கிடைக்க கூடிய தொழில் வாய்ப்பு உள்ளதா? இல்லை கலுரிகளில் வெறும் படத்தினை சொல்லி கொடுபதற்க்கு பதில் கை தொழில் கற்று கொடுக்கலாம் , கல்லூரில் வெறும் பேச்சி போட்டி நடத்துவதற்கு பதில் மாணவிகளுக்கு , கல்வி படிப்பிற்கு பின் வருமானம் தரக்கூடிய வேலை வாய்ப்பு உருவக்கிகொடுக்கலாம் , மாணவிகளுக்கான ஆசிரியர் கல்வி பயிற்சி கல்லுரி திறப்பது பற்றி யோசிக்காலம் ,

    ReplyDelete