தேடல் தொடங்கியதே..

Wednesday 18 September 2013

கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அமைச்சரை நேரில் சந்தித்து ஜவாஹிருல்லாஹ் MLA வலியுறுத்தல் !

கீழக்கரை அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரி, இன்று (18.09.2013) சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களை, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர். எம் எச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

எனது இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட, கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர். கீழக்கரை அரசு மருத்துவமனையில் 2 பெண் மருத்துவர்கள் உட்பட 6 மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர்.


தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கீழக்கரை அரசு மருத்துவமனையில் கீழக்கரை, மாயாகுளம், புல்லந்தை, முள்ளுவாடி, காஞ்சிரங்குடி, பாரதிநகர், மங்களேஸ்வரி நகர், திருப்புல்லாணி உட்பட ஏராளமான கிராமங்களிலிருந்து வெளி நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு உள் நோயாளிகளாக 40 முதல் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனித்தனியே மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் தற்போது குழந்தைகள் நல மருத்துவர்கள் இருவரும், பொது மருத்துவர் ஒருவர் மட்டுமே இருக்கின்றனர். மேலும் புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் நோயாளிகளில் சிலர் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்தது போல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தாங்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி ஏற்கெனவே இருந்தது போல் கூடுதல் மருத்துவர்களை நியமித்து பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து பதிலளித்த அமைச்சர் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

1 comment:

  1. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete