தேடல் தொடங்கியதே..

Friday 4 May 2012

கீழக்கரையில் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை - குத்பா கமிட்டி வேண்டுகோள் !

கீழக்கரைவாசிகள் பொருளாதாரத்தைத் தேடி... வளைகுடாக்களில் கால் பதிக்க, ஆரம்ப காலகட்டங்களில், ஆணி வேராய்... அழுத்தமாய் நின்று அடித்தளமிட்ட அரும்பெரும் மனிதர் 'பி.எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா' என்றால் அது மிகையாகாது.



 
அவர்கள் தற்போது சென்னையில் உடல்நலமில்லாமல் இருப்பதால் அவர்கள்  உடல் நலம் பெற்று பூரண குணமடைய அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுமாறு குத்பா கமிட்டி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியில் குத்பா தொழுகை நிறைவடைந்து துஆ ஓதப்பட்டது. 

நம் கீழக்கரை நகர் மக்கள் அனைவரும், பி.எஸ்.ஏ காக்கா அவர்கள் விரைவில் நலம் பெற, இறைவனிடம் இறைஞ்சுமாறு எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.


பி.எஸ்.ஏ காக்கா அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தெரியாதவர்களே இருக்க முடியாது.  ஐக்கிய அமீரகமான துபாயில் இ.டி. ஏ. என்ற மாபெரும் நிறுவனத்தை நிறுவி, அதன் ஆரம்ப காலங்களில், வெற்றியின் சிகரத்தை நோக்கி பயணிக்க செய்தவர். 

 

 இன்று தமிழ் நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள், பி. எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா அவர்கள் வார்த்தெடுத்த நிறுவனங்களின் தளங்களான துபாய், அபுதாபி மட்டுமல்லாது  உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கனக்கானோர் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவருடைய அயரா உழைப்பு, நேர்மையான தொழில்சார் நடவடிக்கைகள், பணியாளர்களை அரவணைப்புடன் ஊக்குவித்த பண்பு  மிக முக்கியமானது.
 
 

அது மட்டுமல்லாது, சென்னை வண்டலூர் கிரசன்ட் கல்லூரி, கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுரி மற்றும்  பள்ளிகூடங்கள் நிறுவி கல்வி பணியிலும் முத்திரை பதித்தவர் 

B.S.A அவர்களின் ETA நிறுவனத்தினரால் கட்டப்பட்ட சென்னை அண்ணா மேம்பாலம்
பி.எஸ்.அப்துல் ரஹ்மான்  காக்கா அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய சென்னையின் இதய பகுதியாக அனைவராலும் பார்க்கப்படும் ஆயிரம் விளக்கு பகுதியின் அண்ணா சாலையில், பழைமையான, இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேல்ம்பாலம் கூட,  இவர்களின்  இ.டி.ஏ. நிறுவனம் தான் கட்டியது.  

6 comments:

  1. நலம் பெற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  2. நலம் பெற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  3. நலம் பெற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  4. நலம் பெற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  5. நலம் பெறவேண்டும் அவர் என்று
    நாளும் வாழ்த்துகிறோம்.
    நாயன் அல்லாஹ்
    நலம் பெற வைப்பான்.
    அன்பு மறவாத எல்.கே.எஸ்.மீரான்,மேலப்பாளையம்.

    ReplyDelete
  6. We should take lesson from him!!! How to work hard,punctual & to found organizations/succeed in buisness with out back ground support? He succeeded only because of his hard work and business mind.I really boost my inspiration after read news about succeeders who like to work hard until succeed.

    ReplyDelete