தேடல் தொடங்கியதே..

Sunday 2 September 2012

கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தடுமாற்றம் - முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால் பெண்கள் கடும் அவதி !

கீழக்கரையில் கடந்த வாரம் முதல் 'ஆதார்' தேசிய அடையாள அட்டைக்கான, தகவல் சேகரிக்கும் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. தற்போது 3, 4, 5 ஆம் வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான அடையாள அட்டைப் பணிகள், கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த பகுதிபொதுமக்கள், நேற்று காலை முதலே திரளாக வந்து தேசிய அட்டை பெறுவதற்கான தகவல்களை தந்த வண்ணம் உள்ளனர். இதற்கான தகவல்களை சேகரிக்கும் பணியினை இந்திய தேசிய ஆணையத்தால் (UIDAI) பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர். கீழக்கரை நகராட்சியின் ஊழியர்கள் சிலரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.




ஆனால் முறையான வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாததால், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். முதலில் யாரை அணுக வேண்டும்? தகவல்களை யாரிடம் சொல்வது? புகைப்படம் எங்கு எடுப்பது? போன்ற தகவல்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைத்துள்ளனர். காலையிலிருந்தே சிறு குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்களும், முதியவர்களும் சொல்ல முடியா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பெண்களும், முதியவர்களும் அமர்வதற்கு இருக்கை வசதிகள் இல்லை. சரியான வரிசை முறை கடைபிடிக்கப் படாததால் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையே காணப்பட்டது. 




இது குறித்து கீழக்கரையில் ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணிகளின் ஒருங்கிணப்பாளர். திரு ஜெயச்சந்திரன் அவர்களிடம் கேட்ட போது "ஆரம்ப நிலையிலேயே பொது மக்களுக்கு வழி காட்ட கூடுதல் பணியாளர்களை நகராட்சியில் கேட்டுள்ளோம். பொது மக்கள் சிரமமின்றி தகவல் தர போதுமான வசதிகள் இனி வரும் அனைத்து வார்டுகளுக்கும் செய்து தரப்படும். பொதுமக்கள் அதிகமாக வரும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாள்கள் கால அவகாசம் நீட்டித்து தரப்படும்." என்று தெரிவித்தார்.

Comments :

கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நகராட்சியில் இருந்து கூடுதல் பணியாளர்களை தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்காமல், நமது ஊரின் சமூக நல அமைப்புகள், பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினால் நல்லது.
 
Ali Batcha Says : கீழக்கரை ”புதிய ஒற்றுமை” யின் வேண்டுகோள் வரவேறகத்தக்கது..குறைந்த கால அவகாசமே இருப்பதால் உடனடியாக செயல் பட வேண்டியது சமூக நல அமைப்புகளின் கடமையாகும். முதலில் பதிவுக்கு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சபையான நகராட்சியும் மற்றும் மக்கள் பிரதநிதிகளும் இதில் அதிக அக்கரை காட்ட வேண்டும்..

2 comments:

  1. வெளிநாட்டில் வாழும் நங்கள் எப்படி ஆதார் அட்டை பெறுவது? என்று அபுதாபியிலிருந்து நண்பர். பசீர் ரசீன் கேட்டிருந்தார்கள்.

    கீழக்கரையில் ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணிகளின் ஒருங்கிணப்பாளர். திரு ஜெயச் சந்திரன் தரும் தகவல் "இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் முகாம்கள் அனைத்தும் முடிவடைந்த பின், வேலை நிமித்தமாக வெளி நாட்டில் வசிப்பவர்கள், விடுபட்ட உள்ளூர் வாசிகளுக்கென, நகராட்சி அலுவலகத்திலேயே நிரந்தர ஆதார் அட்டை வழங்கும் பணிகள் நடை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

    எனவே வெளி நாடு வாழ் அன்புச் சகோதரர்கள், ஊர் திரும்பம் போது ஆதார் அட்டை பெறுவதற்கான வேலையை செய்யலாம். இந்த அடையாள அட்டை முதன்மை அட்டையாக இருப்பதால், இன்ஷா அல்லாஹ் ஊர் வரும் போது மறக்காமல் நேரம் ஒதுக்கி எடுக்க முயற்சியுங்கள்

    அன்புடன்
    கீழை இளையவன்

    ReplyDelete
  2. 7, 8, 9, 10 wards are going smoothly through token system. Area Service minded people helping the Govt officials. daily limit 50 people to 1 computer. so if 2 computers in 1 ward then 100 tokens issued for 1 day in 1 ward. nicely going. need people to co-operate. many people comming without giving entry and without slip. if there is sticker placed on the house the the entry was made. 1st people need to check your home door weather sticker placed in. if yes, then ask the nearest house about their slip number. if they have, then note that number and ask the helpers to find ur slip number in the gadgets. dont waste time by siting in school and shouting officers.. please people need to cooperate.. its not the 1ly camp.. further camps also provide by govt latter on. and also it can be register in post office also paying small amount. here its free.

    ReplyDelete