தேடல் தொடங்கியதே..

Wednesday 5 September 2012

கீழக்கரையில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா காலணிகள் - கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சிறப்பான சேவை !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள்  வழங்கும் நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவிகள் பயனடைந்தனர். இதற்கான நிகழ்ச்சி கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நேற்று (30.07.2012) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுராகிம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) தலைமை வகித்தார்.


கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர். J.சாதிக், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் செயலாளர். ஜனாப். முகைதீன் தம்பி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினர் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இதில் நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள் திரு. இராஜேந்திரன், திரு.விஜயன், திரு. கெஜி என்கிற கெஜேந்திரன், கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா, முகைதீன் இபுறாகீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக பள்ளியின்  தலைமை ஆசிரியர் முஹம்மது மீரா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர்.சந்திர மோகன் நன்றி கூறினார். இதில் 118 பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டன.  மேலும் ஹமீதியா பெண்கள் மேனிலை பள்ளியில் இன்று (05.09.2012) காலை 9 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஆசிரியர் தின நிகழ்ச்சியில், கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக 140 மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி திரு.விஜயன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

1 comment:

  1. நகர் நல இயக்கம் என்று பெயரைவைத்து தேவையில்லாத இலவசங்களை கொடுத்துக்கொண்டிருப்பது இயக்கத்தின் கொள்கை என்ன என்பதை அறியமுடியவில்ல கீழக்கரையில் சரிசெய்யப்படவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது
    *பாதாள சாக்கடை
    *தரமான சாலை
    *தேவையான இடங்களில் மின்விளக்கு
    *சுகாதாரப்பணிகள்
    *தேவையான இடங்களில் சிறைய மற்றும் பெரிய அளவிலான குப்பைத்தொட்டிகள்
    *தேவையான இடங்களில் நடைமேடைகள்
    *கடற்க்கரை மற்றும் இதர காலி இட நிலங்களில் பூங்காக்கள்
    *குடிதண்ணீர் பிரச்னை
    *வாகன கட்டுப்பாடு
    *நலிந்த வியாபாரிகளுக்கு எண்டோமென்ட் முறையில் வட்டியில்லா நிதியுதவி
    *ஏழை மாணவர்களுக்கு மேல்படிப்பிற்கு நிதியுதவி
    *ஏழை குமரி பெண்களுக்கு மணமுடிக்க நிதியுதவி
    இன்னும் ஊரையும் ஊர்மக்களையும் வளம்பெரசெய்திட நிறைய நற்காரியங்கள் உண்டு இதிலே பெரும் பொருட்செலவில் செய்ய இயலவில்லையெனில் சிறியதாக தகுந்தாற்போல் நகராட்சியுடன் சேர்ந்து பணிசெய்யலாம்
    உ.ம். " சமீபத்தில் ரோட்டரி சங்க தலைவர் அறிவித்த இண்டர்லோக் சாலை"

    ReplyDelete