தேடல் தொடங்கியதே..

Friday 20 September 2013

கீழக்கரையில் த.மு.மு.கவினர் ஒட்டியுள்ள விழிப்புணர்வு சுவரொட்டிகள் - பெற்றோர்கள், தாய்மார்கள் கவனிக்க !

கீழக்கரை மற்றும் 500 பிளாட் பகுதிகளில் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்மணிகள், தாய்மார்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், தற்காலத்தில் கடை பிடிக்க வேண்டிய அத்தியாவசிய நடை முறைகள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.


இதனை வாசித்து செல்லும் பொதுமக்கள் அனைவரும், 'காலத்திற்கு ஏற்ற தகுந்த விழிப்புணர்வு' என தங்கள் அருமையான கருத்துக்களை, உள்ளச் சாரலாய் அள்ளி தெளித்தவாறு செல்கின்றனர்.

10 comments:

  1. நல்ல விசயம்தான்! ஆனால், ஊரில் பெண்கள் கட்டுப்பாடு இழந்து திரிவது போல் விளம்பரம் செய்கிறார்கள்.

    நமதூர் பெண்கள் கண்ணியமாக வாழ்ந்து வரும் சூழலில் அவர்களுக்கு உத்தரவு போடுவதற்க்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. சமுதாய அக்கரை உள்ளவர்கள் முதலில் கேடு கேட்டு திரியும் வாலிபர்களுக்கு அறிவுரை கூறட்டும்.

    மது, சூது, விபசாரம்... என்று ஒரு கூட்டம் அலைகிறது, இன்னும் சிலர் (தவறு) பலர் உழைக்காமல் வெட்டியாக தெருவில் திரிகிறார்கள், சிலர் மனைவி மக்களை புறக்கணித்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பெண்கள் படாத பாடு பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
    தவறு செய்யும் பெண்களை கட்டுப்படுத்த வேண்டியது தான், அதற்க்காக இப்படியா போஸ்டர் அடித்து ஓட்டுவது தைரியம் இருந்தால் ஆண்களுக்கு போஸ்டர் அடித்து எச்சரிக்கை செய்யட்டும்.இறைவன் தமது திருமறையில் ஆண்களையும் பெண்களையும் சேர்த்துதான் அறிவுரை கூறுகிறான்.
    24:30 (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
    33:35 முஸ்லிமான ஆண்களும், பெண் களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

    ReplyDelete
  2. எமது கருத்தை தைரியமாக வெளியிட்ட கீழை இளையவனுக்கு நன்றி

    ReplyDelete
  3. very good sister,
    keelai ilayavan should make visible sister zulaiha comment by just copy and paste in outside link wall.

    ReplyDelete
  4. தவறுகள் ஆண் , பெண் இருபாலாரும் தான் செய்கிறார்கள் , இதில் ஆண் பெண் பாகுபாடு பார்பதற்கு அவசியம் இல்லை , ஆனால் ஒரு ஆண் கெட்டால் அது அவனோடு முடித்து விடும் , ஒரு பெண் கெட்டு போனால் அவள் குடுப்பதை பாழகிவிடும், அவளின் ஆண் பெண் குழந்தைகள் எப்படி ஒழுக்கம் உள்ளதாக வளரும் ? அது மட்டு இல்ல அவளின் குடுபதிருக்கு ஏழு தலைமுறைக்கு கெட்ட பெயர் ஆகும் , சமுதயதிற்க்கும் கெட்ட பெயர் ஆகும் , கெட்டு போன பெண் சமுதாயத்தில் மற்ற பெண்களைம் வழி கெடுப்பாள் , இது சமுதாயத்தில் கரையான் மாதிரி வளர்த்து வருகிறது ,
    பெண் குழந்தைகள் கெட்டு போவதற்கு அவர்களின் பெட்றோர்களின் வளர்ப்பு சரி இல்லாத காரணமே ஆகும் ,

    ReplyDelete
  5. ஒரு சில குடுப்பதில் மனைவிமார்களின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்து ஆண் கெட்டு போய்விடுகிறான் , ஒரு பெண் கெட்டு போவதற்கு ஆண் காரணமோ இல்லையோ , ஆனால் ஒரு ஆண் கெட்டு போவதற்கு பெண் தான் முக்கிய காரணம்

    ReplyDelete
  6. ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,
    ஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,

    ReplyDelete
  7. பெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,

    ReplyDelete
  8. ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,
    பல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,

    ReplyDelete
  9. கீழகரைல் அணைத்து பெண்கள் சேர்ந்து கீழக்கரை பெண்கள் நலன் அமைப்பு ஏற்படுத்தலாம் , இதன் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்மூலம் குழந்தைகளை பெற்றும் குடும்பத்தை கவனிக்காமல் மது சூது விபசாரம் என்று திரியும் திமிர் பிடித்த ஆண்கள் எல்லாரையும் சூலுக்கு எடுக்க வேண்டும் ,
    பெண்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை இந்த அமைப்பு மூலம் உரிமை குரல் கொடுத்து , உரிமைகளை பெற்று கொள்ளலாம் ,

    ReplyDelete
  10. எமது கருத்தை தைரியமாக வெளியிட்ட கீழை இளையவனுக்கு நன்றி

    ReplyDelete