தேடல் தொடங்கியதே..

Sunday 22 September 2013

கீழக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் !

கூர்க்கா (Gurkha) எனும் விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமான நேபாளத்து மக்கள் தமிழகத்தின் சில இடங்களில் இரவு நேர ஊர் காவல் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இமயமலையின் ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் 'கூர்க்கா' எனும் பெயரை பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் பணியில், இந்த கூர்க்காக்கள் பல்லாண்டுகளாக  ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் அயாராத விழிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபடும் கூர்க்காக்ககள் எழுப்பும் விசில் சப்தம், பொதுமக்களின் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.


கீழக்கரை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் பாதுகாப்பில் முனைப்புடன் பணியாற்றும் கூர்க்கா - சந்திர பகதூர் சிங் (வயது 58) அவர்கள் நேபாளத்தில் பஜங் பகுதியை சேர்ந்தவர். 15 வயதில் கூர்க்கா பணிக்கு கீழக்கரை வந்துள்ளார். தற்போது கீழக்கரை நகரில் எல்லைகள் விரிவடைந்து 500 பிளாட் பகுதி முதல், புதுக் கிழக்கு தெரு பகுதி (பெரிய காடு) வரை சென்று விட்டது.

இதனால் கூடுதல் கூர்க்கா பணிக்கு இவருடன் இணைந்து கோகன் பகதூர் (வயது 50), தில் பகதூர் (வயது 43), பல பகதூர் (வயது 40) ஆகியோர்கள் இரவு நேரங்களில் பாது்காப்புக்காக சுற்றி வருகின்றனர். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, நடுங்க வைக்கும் பனி என்று எக்காலத்திலும் இவர்களின் பணி ஒரு நாளும் தடை படுவதில்லை. 


ஆரம்ப காலத்தில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர்.

கூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், சிங்கப்பூரின் உள்ளூர் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்திய இராணுவப் படையில் 7 கூர்க்கா படை பிரிவுகளில் சுமார் 32000 க்கும் மேற்பட்ட கூர்க்காக்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பகதூர் பிரிவினர் வீரம் செறிந்தவர்களாக விளங்குகின்றனர்.

இது குறித்து நம்மிடையே பேசிய  கூர்க்கா - சந்திர பகதூர் சிங் அவர்கள் கூறியதாவது,

கீழக்கரையில்  கூர்க்காவாக இருந்து மக்களுக்கு பணி செய்வது, எங்களுக்கு  பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு கூர்க்கா பணியில் சேர்ந்து இது வரைக்கும் ஏராளமான கொள்ளை மற்றும் திருட்டுக்களை தடுத்து்ள்ளேன். திருடர்கள் பலரை விரட்டி பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளேன்.

நாங்கள் பொதுவாக 'குக்குரி' என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் எங்களுடனே வைத்திருப்போம். திருடர்கள் எவ்வளவு தூரத்தில் ஓடினாலும், இந்த கத்தியை இலாவகமாக வீசி தாக்கும் வித்தை எங்களுக்கு கை வந்த கலை.

கீழக்கரையின் குறுகிய தெருக்களுக்குள், நள்ளிரவு நேரங்களில் சந்தேகபடும் படியாக யாரேனும் நடமாடினால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து விடுவேன். வருடம் ஒரு தடவை, குடும்பத்தாரை காண 15 நாள்கள் விடுமுறை எடுத்து கொண்டு நேபாளம் சென்று வருவேன்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, வீடுகளில் பெறப்படும் சிறிய தொகை மூலம் வாழ்க்கையை நகற்றி வருகிறோம். வேறு எந்த ஒரு வருமானமும் இல்லை. வெளிநாடு வாழ் கீழக்கரை மக்கள், ஊர் வரும் போது, எங்களுக்கு ஏதேனும் பொருளாதார உதவிகள் செய்யுங்கள்" என்று கண்ணியமான வார்த்தைகளுடன் வேண்டுகோள் விடுத்தார்.

FACE BOOK COMMENTS :
  • Mohamed Irfan இந்த கூர்க்கவை இங்கு முதலில் பணி அமைத்தியவர் மற்றும் வீடு சம்பளம் வழங்கியவர்கள் யார் என்ற வரலாற்று செய்தியையும் இங்கு தந்தால் மிக பலனுள்ளதாக இருக்கும்..... நண்பா உன் தகவலுக்கு என் வாழ்த்துகள்......
  • Saheerudeen Klk great identification brother! people silently toiling much from the bottom. salute to him & ur identification may help him & his people.. thank you very much for this info !

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஊர் பாதுகாப்பில் அரை நூற்றாண்டாக பணியாற்றி பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் இன்னும் நம் மக்கள் அவருக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு தாராளமாக பொருளுதவி தருவதோடு, அவரை பாராட்டி கவுரவிக்க அனைவரும் முன் வர வேண்டும்.
  • Saheerudeen Klk @puthiya otrumai: mihachariyaha soneerhal.. ivaradhu ulaipinai adayalam kandu awarukku udhai seyyavendum ! seyvom insha allah
  • Fouz Ameen நல்ல தகவலை தந்த கீழை இளையவனுக்கு நன்றி
  • Syed Abusalique Seeni Asana Good work.. which shows clearly the keelai ilaiyavan minds always seeking to find the real heros.. really these people works are major and and more helpful for us.. but they are just curry leaves b4 this news articles.. thanks to keelai ilaiyavan to focus on this.. I hope Keelakarai Ali Batcha mama knows this history of how gurka's comes into this service in our town.. they living long long us a big family in sathikali appa house..
  • A.s. Traders நல்ல தகவலை தந்த கீழை இளையவனுக்கு நன்றி

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா22 September 2013 at 19:51

    அவசியம் இவர்களுக்கு நாம் உதவத் தான் வேண்டும். தன் ஏழமை நிலையை விளக்கி வாய் விட்டும் கேட்டு விட்டர்ர்.நம்மை நம்பி வந்த இவர்களுக்கு நாம் தான் ஆதரவு கரம் கட்டாயம் நீட்ட வேண்டும்.

    அந்த சிரித்த முகத்தை, இன்று ஊரில் சிறியோர் முதல் வயோதிகர் வரை இந்த பக்தூர்ஜீயை அறியாதவர்கள் இருக்க முடியாது.வந்த நாள் முதல் இந்த நாள் வரை பாரிய குற்றத்தை யாரும் இவரிடம் காணவிலைலை.

    நமதூரில் 7500 முதல் 8000 குடி இருப்புகள் உள்ளன. இதில் பகுதி பேர் மாதம் ரூ.10/= கொடுத்தால் கூட அவர்கள் வாழ்க்கை செழிப்பாகி விடும். ஒரு டீ, ஒரு வடை கூட ரூ.9/= முதல் ரூ.11/= செலவாகிறது. ஆகையால் கொடுக்கிற பணம் பெரிதில்லை. கொடுக்கிற் மனம் தான் பெரிது. இன்ஷா அல்லா நாம் இவர்களுக்கு பெரிய மனது பண்ணி உதவ சங்கல்பம் செய்வோமாக.

    அனாசாரத்தையும், நாகரீக சீர்கேட்டையும் (அரிதான சில நிகழச்சிகளைத் தவிர)பரப்ப வீட்டின் நடு மையமாக இருக்கும் ”இடியட் பாக்ஸ்”-க்கு மாதாமாதம் மனமுவந்து கொடுக்கும் போது இவர்களுக்கு கொடுக்க முடியாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    இப்போது கஸ்டம்ஸ் ரோட்டில் குருசடிக்கு அருகில் பழைய குத்பாப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த தொழில் அதிபர் எம்.எம்.எச். சாதிக் அலி அவர்கள் தாராள மனதுடன் இலவசமாக கொடுத்த வீட்டில் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது

    ReplyDelete