தேடல் தொடங்கியதே..

Wednesday 17 July 2013

கீழக்கரை நகரின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, 8 அம்ச கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கமிஷனரை சந்தித்து வழங்கினர் !

கீழக்கரை நகரில், இன்னும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளை களையும் நல்ல நோக்கோடு, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள், நேற்று (16. 07.2013) கீழக்கரை நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கமிஷனர் அய்யூப் கான் அவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கோரிக்கை மனுவும் அளித்தனர். 




அந்த மனுவில், கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேட்டை சீர் படுத்துவது, சாலைகளில் கொட்டப்படும் கட்டுமானப் பொருள்களை அகற்ற ஆவன செய்வது, தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகள் வழங்குவது, கடற்கரை ஓரங்களில் மீண்டும் கொட்டப்படும் குப்பைகளை தடுத்து நிறுத்துவது, சாலை இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்ப்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.






இந்த சந்திப்பில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு), செயலாளர் பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், உறுப்பினர்கள் விஜயன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு,  நகரின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டுகோள் விடுத்தனர். இந்த கலந்துரையாடலின் போது சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி உடனிருந்தார்.

1 comment:

  1. சவுக்கடி சாவன்னா18 July 2013 at 20:43

    கடந்த திங்கட் கிழமை (15/07/13) சுமார் காலை 9.45 மணி அளவில் ரிபாய் தைக்கா வெளித் திண்ணையில் பலர் துர் நாற்றத்தை சுவாசித்துக் கொண்டு இருக்கையில் அவ்வழியே நமது நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிரமூர்த்தி அவர்கள் அவ்வழியே சென்றார்.13/07/13 சனிக்கிழமை கீழை இளையவன் வளைத்தளத்தில் சுகாதார கேடு சமபந்தமான பதிவில் கண்ட விஷயத்தை காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அதற்கு முறையான பதில் கொடுக்க அவரால் முடியவில்லை.ஆனால் ஒரு உன்னதமான காரியத்தை செய்தார்.அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு டிராகடர், 7,8 துப்பரவு பணியாளர்களை ஒரு சூப்பர்வைஸர் தலைமையில் முஸ்லீம் பஜாரிலிருந்து பழைய குத்பாப் பள்ளி செல்லும் சாலையில் பல நாட்களாக நாறி போய் இருந்த குப்பைகளை பலரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் துப்பரவு செய்தார்கள். இது எப்படி சாத்தியாமாயிற்று. இது போல இன்றும் (18/07/13) துப்பரவு பணி செய்தார்கள்.ஆக, அவர்கள் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே.

    மக்களின் எழுச்சிக்கு முன்பே இப் பணியை நகராட்சி தலைவியும் சம்பந்த பட்ட வார்டு மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி எடுத்திருக்கலாமே. விதண்டா வாதம் பண்ணூவதை விட்டு விட்டு மக்கள் நலப் பணியில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தினால் அவர்களுக்கும் நல்லது. நகருக்கும் நல்லது.

    ReplyDelete