தேடல் தொடங்கியதே..

Tuesday 4 June 2013

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையம் அமைக்க நகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளுக்கு பலன் இன்னும் 15 நாள்களில் கிடைக்கும் - கீழக்கரை சேர்மன் அறிவிப்பு !

கீழக்கரை நகரில் ஊருக்கு வெளியே உள்ள மின்சார கட்டண வசூல் மையத்தை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் கீழக்கரை நகர் சோஷியல் டெமொக்ரெடிக் பார்ட்டி (SDPI) கட்சியினர் கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறைபடுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 




இது குறித்து கீழக்கரை நகராட்சி சேர்மன் ஜனாபா. இராவியத்துல் கதரியா அவர்கள் கூறும் போது "நான் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமான 'ஊருக்குள் மின் கட்டண வசூல் மையம்' சம்பந்தமாக இது வரை நகராட்சி சார்பாக பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிரதி பலனாக கடந்த மார்ச் மாதம் மின்சார வாரிய செயற் பொறியாளரிடம் இருந்தும், மின் பகிர்மான நுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற தலைவரிடம் இருந்தும், எங்கள் கோரிக்கைகளுக்கான பதில் மனு பெறப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் பதில் கடிதம் 

அந்த பதில் கடிதத்தில் புதிய பேருந்து நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் அமைக்க ஒப்புதல் அளித்ததோடு, விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அது நாள் முதல் தொலைப்பேசி வாயிலாகவும், நேரடியாகவும் பணிகளை விரைந்து துவங்கக் கோரி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். இறைவன் நாடினால் இன்னும் 15 நாள்களில் வசூல மையம் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்குள் இந்த போஸ்டர் SDPI கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் 18 வது கவுன்சிலரின் குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை" என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் பதில் கடிதம் 

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட தலைமை மின்சார வாரிய பொறிஞர். ரா.அசோக் குமார் அவர்களை நேரடியாக் சந்தித்து கேட்ட போது "தற்போது நிலவும் பணியாளர்கள் பற்றாக் குறைவால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வசூல் மையம் நகருக்குள் அமைய நகராட்சி சேர்மன் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.  புதிய பேருந்து நிலையத்தில் வசூல் மையம் அமைக்கவும், புதிய தெரு விளக்குகள் அமைக்கவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.  

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி :

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறை படுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர், மின்சார வாரியத்திற்கு SDPI கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் கண்டனம் !

http://keelaiilayyavan.blogspot.in/2013/06/sdpi.html

 
FACE BOOK COMMENTS :

Like ·  ·  · Share · Edit

3 comments:

  1. கீழக்கரை மின் கட்டண வசூல் மையம் அமைக்க நகராட்சி தலைவியின் 21/01/13 தேதிய கடிதத்திற்கு தலைவர், நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், இராமநாதபுரம் அலுவலத்தில் பதில் மனு 19/03/13 அன்று தயாரிக்கப்பட்டு 21/03/13 அன்று ஒப்பம் இடப்பட்டுள்ளது. என்று தபாலில் சேர்க்கப்பட்டது என்பதை யாமறிவோம்.வாழ்க அவசியமான மக்கள் சேவைக்கு அரசு சார்பில் செய்யப்படும் துரித சேவைக்கு

    ReplyDelete
  2. இந்த லட்ஷணத்தில் 15 நாளில் ம்ம்ம்ம்..........

    ReplyDelete
  3. இந்த போட்டோ மிகுந்த வேதன அளிக்கிறது.மேலும் அவ நம்பிக்கையையும் அளிக்கிறது.

    மனு அளிப்பவரோ ஐம்பதாயிரம் மக்களுக்கும் மேலாக வாழும் கீழக்கரை நகரின் முதன்மை மக்கள் பிரதிநிதி, முதல் குடிமகள். மேலும் ஆளும் கட்சியை சார்ந்தவர். அவருக்கு ஒரு இருக்கை கொடுத்து உட்கார வைத்து, மனுவை பெற்று படித்து பார்ககக் கூடிய சிறு மரியாதை நடை முறை கூட தெரியாத அதிகாரியிடம் எந்த பயனை / நடவடிக்கையை எதிர் பார்க்க முடியும்.. கொடுமை... காலந்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete