தேடல் தொடங்கியதே..

Friday, 7 June 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு! (பழைய குத்பா பள்ளி ஜமாத்)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஜனாப்.முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும், மீ.ம.அலி பாட்சா,  மீ.ம.முஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரியும், ஹுசைன், ஹக் அவர்களின் தாயாரும், நூர் ரஹ்மான், அப்துர் ரஹ்மான், ரிபாய் ரஹ்மான், சீனி சித்தீக் ரஹ்மான், ஹமீது ரஹ்மான், ஹலீம், ஆகியோரின் மாமியும், எனதருமை தோழிமாவுமாகிய 'மீ.ம.முத்து ஆமினா' அவர்கள் நேற்று (06.06.2013) வியாழக்கிழமை ) இரவு வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்று (07.06.2013) வெள்ளிக் கிழமை  காலை 10.30 மணியளவில் பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெற்றது. மீ.ம. முத்து ஆமினா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

 1. அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

  வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

  அன்னாரின் மஃபிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

  இந்த அன்பு சகோதரியை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் அனைத்து தரப்பினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அவனின் அழகிய பொறுமையை அல்லாஹு சுபுஹானவுத்தாலா வாரி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன்

  இன்று (07/06/13 வெள்ளிக் கிழமை) அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கீழக்கரை பழைய குத்பாப் பள்ளி மையவாடியில் காலை 10.45 மணி அளவில் செய்யப்பட்டது

  ReplyDelete