தேடல் தொடங்கியதே..

Tuesday, 24 September 2013

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வறட்சியால் கருகிய 5000 மரக் கன்றுகள் !

கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் சாலையின் இரு புறங்களிலும் ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியிலும், ஒரு மரம் வீதம் 5000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பனியின் போது பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது.அதற்கு பகரமாக, அதை விட இரண்டு மடங்கு மரங்களை நடுவதற்காக, தமிழக சாலை போக்குவரத்து துறையினரின் வழிகாட்டுதல் படி, தமிழக வனத் துறையினர்  நிழல் தரும் புங்கை, வேம்பு, கொன்றை, இலுப்பை போன்ற மரக்கன்றுகளை நட்டு, தினமும் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்

ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து  மரக்கன்றுகளை பாதுகாக்கும் பொருட்டு, தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட தட்டிகளை கொண்டு பாதுகாப்பு தடுப்பும் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தாலும், சரி வர மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாகவும், நடப்பட்ட 5000 மரக் கன்றுகளும் கருகிப் போனது. இதனால் கீழக்கரை இராமநாதபுரம் சாலை, 'சோலைவனமாக போகிறது' என எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து நாம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை  சொடுக்கவும்.

No comments:

Post a Comment