தேடல் தொடங்கியதே..

Monday 23 September 2013

கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாத்தினர் பங்கேற்கும் 'மழைத் தொழுகை' அறிவிப்பு !

கீழக்கரை நகரில் மழை பெய்யாததன் காரணமாக, கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லொன்னா துயரத்தில் தவிக்கின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இறையோனிடம் கையேந்தும் முகமாக, கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்றிணைந்து, திறந்த வெளியில் 'மழை தொழுகை' நடத்த முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.



இந்நிலையில் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்க இருக்கும் மழை தொழுகை எதிர் வரும் ஞாயிற்று கிழமை (29.09.2013) காலை 7.45 மணியளவில் பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற உள்ளது.


இது குறித்து கீழக்கரை நகரின் மூத்த சமூக ஆர்வலர். அலி பாட்சா அவர்கள் அனுப்பித் தரும் தகவல் பின்வருமாறு :

அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ.

ஏக நாயனே, யாரப்பே... எனது நீண்ட நாள் ஆதங்கம் நிறைவேறும் முகமாக நம்பகமான இனிய செய்தி ஒன்று இன்று மதியம் எனது காதில் தேனாக பாய்ந்தது. அது தான் நம் கீழக்கரை நகரின் அனைத்து ஜமாத்தினரும், ஒற்றுமையுடன் பங்கேற்று தொழ இருக்கும் மழை தொழுகை  அறிவிப்பு. அல்ஹம்துலில்லாஹ்...

எங்கள் இறைவனே.. கிணற்று நீரின்றி நாங்கள் குறிப்பாக பெண் மக்கள் படும் பெரும் துயரினை நீக்க உன்னிடன் பொறுப்பு சாட்ட இப்போதே நீராடும் கண்களோடு இரு கரம் ஏந்தி விட்டோம். நீயே அனைத்து மக்களுக்கும் போதுமானவன், ஆமீன், ஆமீன், யாரப்பில் ஆலமீன்." என்று அக மகிழ்வுடன் தன் கருத்தை பதிவு செய்தார்.

இது குறித்து பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர். ஹாஜா முஹைதீன் அவர்கள் கூறும் போது "இறைவன் நாடினால் குறிப்பிட்ட தேதியில் நடை பெற இருக்கும் மழை தொழுகையில், கீழக்கரை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, இறைவனிடம் இரு கரம் ஏந்தி மழைக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பெண்கள் தொழுவதற்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை - நடுத்தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்றது !

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. தவறுகள் ஆண் , பெண் இருபாலாரும் தான் செய்கிறார்கள் , இதில் ஆண் பெண் பாகுபாடு பார்பதற்கு அவசியம் இல்லை , ஆனால் ஒரு ஆண் கெட்டால் அது அவனோடு முடித்து விடும் , ஒரு பெண் கெட்டு போனால் அவள் குடுப்பதை பாழகிவிடும், அவளின் ஆண் பெண் குழந்தைகள் எப்படி ஒழுக்கம் உள்ளதாக வளரும் ? அது மட்டு இல்ல அவளின் குடுபதிருக்கு ஏழு தலைமுறைக்கு கெட்ட பெயர் ஆகும் , சமுதயதிற்க்கும் கெட்ட பெயர் ஆகும் , கெட்டு போன பெண் சமுதாயத்தில் மற்ற பெண்களைம் வழி கெடுப்பாள் , இது சமுதாயத்தில் கரையான் மாதிரி வளர்த்து வருகிறது ,
    பெண் குழந்தைகள் கெட்டு போவதற்கு அவர்களின் பெட்றோர்களின் வளர்ப்பு சரி இல்லாத காரணமே ஆகும் ,

    ஒரு சில குடுப்பதில் மனைவிமார்களின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்து ஆண் கெட்டு போய்விடுகிறான் , ஒரு பெண் கெட்டு போவதற்கு ஆண் காரணமோ இல்லையோ , ஆனால் ஒரு ஆண் கெட்டு போவதற்கு பெண் தான் முக்கிய காரணம்

    ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,
    ஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,

    பெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,
    பல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,

    ReplyDelete