தேடல் தொடங்கியதே..

Wednesday, 25 September 2013

கீழக்கரையை 'மாசில்லா நகராக' மாற்றும் முயற்சியில் கீழக்கரை நகராட்சி !

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் சேர்கிறது. அந்த குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், தனியார் தொண்டு நிறுவனமான வெல்பேர் டிரஸ்ட் அமைப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், கீழக்கரை பகுதி முக்கியஸ்தர்கள் முயற்சியில்  மாவட்ட நிர்வாகத்தினரின் மேற்பார்வையில், தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டி உரமாக்கும் நவீன குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டது.


குறுகலான தெருக்களை கொண்ட கீழக்கரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாததாலும், நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை அந் தந்த பகுதியிலேயே கொட்டி வந்தனர். இதனால் நகரசபை நிர்வாகத்துக்கு குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் குப்பைகள் அதிகளவில் சேர்ந்து சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் நகரசபை தலைவர் கீழக்கரையை மாசில்லா நகராக மாற்றும் திட்டத்தில் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதன்படி கீழக்கரை நகராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் நகரசபை தலைவர் ராவியத்துல் கதரியா 20 'மினி' குப்பை தொட்டிகள் வாங்கி ஆணையாளர் அயூப்கானிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகி அமீர் ரிஸ்வான், துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

3 comments:

 1. இது ஒரு நல்ல திட்டம் , அனால் இதுமாதிரி திட்டத்தினால் மக்களை திருத்துவது கஷ்டம் , சில கெட்ட குணம் படைத்தவர்கள் குப்பைகளை குப்பை தொட்டில் போடமாட்டர்கள் , குப்பை தொட்டிக்கு அருகில் போடுவார்கள் , குப்பைகளை கண்ட இடத்தில் போட்டால் அதற்க்கு உடனடியாக கடுமையான அபராதம் விதித்து பணம் வசூல் செய்தால் ஓரளவு மக்களை திருத்த முடியும் , சட்டத்திற்கு பயப்பட வில்லை என்றாலும் தண்டம் கட்டுவதற்கு பயபடுவார்கள் , இது போன்ற முறைகளை ஏற்படுத்தினால் , அபராதம் விதித்து பணம் வசூல் செய்வதால் நகராட்சிக்கு கணிசமான வருமானமும் கிடைக்கும் , ஊரைஇம் சுத்தம் செய்யவும் முடியும் ,

  ReplyDelete
 2. பொது இடங்களில் புகை பிடிபவர்களை என்ன செய்ய போறீர்கள்?,
  பொது இடத்தில் புகை பிடிப்பதை எப்படி தடுக்க போறீர்கள் ?

  ReplyDelete
 3. ஊர் முழுவதும் காமர உடன் நபர்களை நியமித்து , குப்பைகளை கண்ட இடத்தில் கொடுபவர்களை படம் பிடித்து , பின் நகராட்சி ராசிது மூலம் அபராதம் தொகை வசூல் செய்யலாம் , அபராதம் தொகை வசூல் செய்பவர்க்கு நகராட்சி மூலம் கமிஷன் தொகை கொடுக்கலாம்

  ReplyDelete