தேடல் தொடங்கியதே..

Sunday, 6 October 2013

கீழக்கரையில் மழை வேண்டி இறைவனை இறைஞ்சும் 'பிரார்த்தனை வாசகங்கள்' - சகோதரர். தங்கம் இராதாகிருஷ்ணன் முயற்சி !

கீழக்கரையில் மழை பெய்யாததன் விளைவாக கடும் வறட்சி நிலவி வருகிறது. பள்ளிவாசல்கள் தோறும், மழை வேண்டி இறைவனிடம் கையேந்தி, சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்ற வண்ணம் உள்ளது. கடந்த 29.09.2013 அன்று மழை பொழிவை எதிர்நோக்கி, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்ற சிறப்பு மழைத் தொழுகையும் நடை பெற்றது. இந்நிலையில் கீழக்கரை சமூக நல நுகர்வோர் மனித உரிமைகள் இயக்கத்தின் செயலாளர், சமூக நல்லிணக்க சகோதரர் தங்கம் இராதாகிருஷ்ணன் அவர்கள் முயற்சியில் முஸ்லீம் பஜாரில் தங்கம் லேத் முன்னதாக மழை வேண்டி இறைவனை இறைஞ்சும், நபிகளாரின் அழகிய 'பிரார்த்தனை வாசகங்கள்' வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் இந்த வாசகங்களை வாசித்து மழை வேண்டி இறைவனை வேண்டியவாறு கடந்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment