தேடல் தொடங்கியதே..

Tuesday, 9 July 2013

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்று (09.07.2013) நடைபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

கீழக்கரை ரோட்டரி சங்கம், முஹம்மது சதக் கல்லூரி ரோட்ராக்ட் கிளப்,  மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை மற்றும் வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய பள்ளி, கல்லூரி ஆசிரிய பெரு மக்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (09.07.2013) செவ்வாய்க் கிழமை  காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளி வாளாகத்தில் நடை பெற்றது.இந்த இலவச முகாமை ரோடரியன். மேஜர் டோனர். டாக்டர். சின்னதுரை அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் கீழக்கரை நகரில் உள்ள ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரிய பெருந்தகைகள், ஊழியர்கள் கலந்து கொண்டு, தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்வில் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் பிரதானிகள், வடக்குத் தெரு ஜமாஅத் முக்கியஸ்தர்கள், முஹைதீனியா பள்ளியின் நிர்வாகத்தினர் மற்றும் பல்வேறு பொது நல அமைபினர்கள் கலந்து கொண்டனர்.

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit

1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி, எந்த அமைப்பினர் செயதாலும் நல்ல விஷயம்தான், அதற்காக ஏன் பெண்களை செக்கப்பன்னும்போது இவ்வளவு ஆண்கள் கூட்டம்??? இது போன்று பணம் செலுத்தி செக்கப் பன்னும்போது 2 ஆண்கள் இருந்தால் எவ்வளவு கோவம் வரும். இந்த கருத்து சுட்டிக்காட்டுவதற்காக யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கல்ல.

    ReplyDelete