தேடல் தொடங்கியதே..

Monday, 8 July 2013

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக நாளை (09.07.2013) நடைபெறும் பள்ளி, கல்லூரி ஆசிரிய பெரு மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தினரின் முயற்சியில், மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையினருடன் இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரி ஆசிரிய பெரு மக்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை செவ்வாய்க் கிழமை (09.07.2013) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் பள்ளி வாளாகத்தில் நடை பெற உள்ளது.


இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர். ரோடரியன். டாக்டர். செய்யது ராசிக்தீன் அவர்கள் கூறும் போது "இந்த இலவச முகாமை ரோடரியன். மேஜர் டோனர். டாக்டர். சின்னதுரை அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைக்கிறார்.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் ஆசிரிய பெரு மக்களுக்கு, இலவசமாக இரத்தப் பரிசோதனை, சிறு நீர் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, ECG, கண் பார்வை திறன் பரிசோதனை உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

கீழக்கரை நகரின் அனைத்து பள்ளி, கல்லூரி பணியாளர்களும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment