தேடல் தொடங்கியதே..

Tuesday, 9 July 2013

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - 15 கவுன்சிலர்கள் கைது !

கீழக்கரை நகராட்சியில் இன்று (09.07.2013) செவ்வாய் கிழமை காலை 11.30 மணியளவில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகராட்சித் தலைவி இராவியத்துல் கதரியா தலைமையில் நடை பெற்றது. சுமார் 17 பக்கங்கள் கொண்ட, 29 தீர்மான பொருள்கள் அனைத்தும், நகர் மன்ற கவுன்சிலர்களின் எவ்வித ஒப்புதலும் இல்லாமல் 10 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, 11.45 மணிக்கெல்லாம் கூட்டம் நிறைவடைந்ததாக தெரிகிறது.

இதனை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களும், சுயேச்சை கவுன்சிலர்களுமாக 15 நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முஹைதீன் அவர்கள் தலைமையில், நகராட்சி தலைவியை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கீழக்கரை நகராட்சிக்கு சுமார் 12.30 மணியளவில், கீழக்கரை காவல் துறையினர் வந்து கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "எங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே  முன் வைப்போம்" என்று தெரிவித்தனர்.
இதனால் சமாதானம் ஏற்படாததால், காவல் துறையினர் அனைத்து கவுன்சிலர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு நடை பயணமாக அழைத்து சென்றனர். அப்போது கவுன்சிலர்கள் அனைவரும் நகராட்சி தலைவியை கண்டித்தும், அவருடைய கணவரின் நிர்வாகத் தலையீட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு நடந்து சென்றனர்.இதனால் பொதுமக்களிடையே, சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தற்போது 15 கவுன்சிலர்களும் கீழக்கரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே கீழக்கரை காவல் நிலையத்தில் குவிந்த பல்வேறு முன்னணி தொலைக்காட்சி ஊடகத்தினர், கவுன்சிலர்களிடம் நிலவரத்தை கேட்டறிந்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.

FACE BOOK COMMENTS :


 • Ams Thameemudeen thambi arrest aaghi irukkum 13 peril, `12 peru mattum veliye varattum, thiru mohideen ibrahim kaka mattum vida vendaam endru sollugal
  9 hours ago · Like · 2
 • Fouz Ameen இதெல்லாம் அரசியலுல சாதாரணம்பா. இதுல எத்தனை பேரு இலஞ்சம் வாங்காத கவுன்சிலரு சொல்லுங்க பாக்காலாம்.
  9 hours ago · Like · 3
 • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. இப்போது புதிய கூட்டணி அமைத்திருக்கும் கவுன்சலர்களே, உங்களுடைய உணமையான நோக்கம் தான் என்ன ? பணம் சம்பாதிப்பதா ? மக்கள் நலனா ? 

  இன்றைக்கு நகராட்சி கூட்டத்திற்கு 15 கவுன்சிலர்கள் வந்து சேரும் முன்னதாகவே, வெறும் 6 கவுன்சிலர்களை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும் அளவுக்கு, இவர்களுக்கு தைரியத்தை கொடுத்தது யார் ?

  நீங்கள் ஏற்கனவே, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்ற பண முடிப்புகள் தானே.. சரி. பழைய குப்பைகளை கிளற வேண்டாம். நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். இனி நடக்கப் போவது நன்மையாக இருக்கட்டும். 

  இனியாவது மக்கள் நலனை மட்டும் மனதில் கொண்டு, எந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டு வாசலிலும் நின்று யாசகம் கேட்காமல், இறைவனுக்கு பயந்து, ஊருக்காக பாடுபட உறுதியோடு நில்லுங்கள். இறைவன் நம் அனைவருக்கும் நல் அருள் பாலிப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
  9 hours ago · Like · 7
 • சின்னக்கடை நண்பர்கள் காசு.. பணம்.. துட்டு... மணி...... மணி
  8 hours ago · Like · 4
 • Habib Mohamed காசுக்காக பத்து நாளைக்கு ஒரு பக்கம் மற்றொரு பத்து நாளைக்கு மற்றொரு புறம் என்று ஒரிஜினல் அரசியல் வாதிகளே தோற்கும் அளவிற்கு இருக்கிறார்கள் .சுயநலத்தை விட்டு பொதுநலமாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வராது . சிலரின் பதவி வெறிக்கு இந்த கவுன்சிலர்கள் இரையாகிறார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது இப்படி மாறி மாறி திரியும் கவுன்சளிலர்களினால் ஊருக்கு எந்த பிரோஜனமும் இல்லை .
 • Mohamed Nageem Marika உண்மையாக குரல் கொடுக்கும் நல்லுல்லம் கொண்ட உறுப்பினர்களுக்கு எனது பங்கினை இதன் மூலம் பதிவு செய்துகொள்கிறேன்
 • Ameen Thaj no comments becse no use.......

No comments:

Post a Comment