தேடல் தொடங்கியதே..

Friday, 12 July 2013

கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா கல்விக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

கீழக்கரை வடக்குத் தெரு ஜமாத்தின் பொதுக் குழு கூட்டம், ஜமாஅத் தலைவர் ஜனாப். M.Y.அக்பர் கான் அவர்கள் தலைமையில், கடந்த 05.07.2013 வெள்ளிக் கிழமை கிழமை அன்று, முஹைதீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இதில் வடக்குத் தெரு ஜமாஅத் பெரு மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்தனர்.


வடக்குத் தெரு நடை பெற்ற இந்த நிகழ்வின் போது, வடக்குத் தெரு முஹைதீனியா கல்விக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முஹைதீனியா கல்விக் குழுவின் தலைவராக ஜனாப். சேகு முஹைதீன் அவர்களும், துணைத் தலைவராக ஜனாப். M.M.S.முஹைதீன் இபுராஹீம் அவர்களும், முஹைதீனியா பள்ளியின் தாளாளராக ஜனாப். E.M.S.மவ்லா முஹைதீன் அவர்களும், செயலாளராக டாக்டர். செய்யது ராசிக்தீன் அவர்களும், துணை செயலாளராக ஜனாப். S.அஹமது மிர்ஷா அவர்களும், துணை செயலாளராக ஜனாப். M.Y.முஹம்மது ரபீக் அவர்களும், பொருளாளராக ஜனாப். A.பசீர் அஹமது (கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர்) அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

1 comment:

  1. வருடத்திற்கு வருடம் சீரோடும் சிறப்போடும் பீடு நடை போட்டு வரும் முஹைதீனியா பள்ளிகள், புதிய நிர்வாகத்தினரின் வரவால் மேன்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறோம். வல்ல நாயனிடத்தில் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகின்றோம்.

    ReplyDelete