தேடல் தொடங்கியதே..

Saturday 31 August 2013

கீழக்கரையில் மீண்டும் தொடர் 'மின் வெட்டு (சீசன் -2)' துவங்கியதால் தூக்கமில்லாமல் புழுங்கும் பொதுமக்கள் !

தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை நீங்கி, கடந்த மூன்று மாதங்களாக, பொதுமக்கள் நிம்மதியாக பொழுதினை கழித்து வந்தனர். ஆனால் காற்றாலை உற்பத்தி குறைவு, அனல் மின் உற்பத்தி குறைவு, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைவு ஆகியவற்றால், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறை என்று அடுக்ககடுக்காக சொல்லப்படும் காரணங்களால் நேற்று முன் தினம் (28.08.2013) முதல் தமிழகத்தில், மீண்டும் பரவலாக மின்தடை ஏற்பட்டு உள்ளது. தவிரவும், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் கொண்ட, ஒரு யூனிட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதனையொட்டி கீழக்கரை பகுதியிலும் அறிவிக்கப்படாத பல மணி நேர தொடர் மின் வெட்டு நிலவுகிறது. நேற்றைய தினம் (30.08.2013) மட்டும் காலை முதல் இரவு வரை 10 மணி நேர மின் வெட்டு நிலவியது. இதனால் கீழக்கரையில் தொடர் மின் வெட்டு 'சீஷன் - 2' துவங்கியிருப்பதாக பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கீழக்கரை நகர் தவிர, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் இங்கு மட்டும் குளுமைக்கு மாறாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது. தற்போது தொடர் மின் வெட்டும் சேர்ந்துள்ளதால், பொதுமக்கள், இரவு நேரங்களில் புழுக்கத்தில் தவிக்கின்றனர்.

FACE BOOK COMMENTS :

No comments:

Post a Comment