தேடல் தொடங்கியதே..

Thursday, 29 August 2013

கீழக்கரை அண்ணா நகர், முத்துச்சாமிபுரம் பகுதிகளில் ஜவாஹிருல்லா MLA நேரடி ஆய்வு - பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் !

கீழக்கரை நகராட்சியின் புற நகர் பகுதிகளான 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை, இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர். பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் கடந்த (24.08.2013) அன்று மாலை, நேரடி ஆய்வு செய்து, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், நகர் தமுமுக தலைவர் முஹம்மது சிராஜூதீன், மாவட்ட செயலாளர் அன்வர்அலி மற்றும் தமுமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, முகைதீன் இபுராகிம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இந்த பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் கீழக்கரை நகராட்சியில்  துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இங்கு தெரு விளக்கு, குடிநீர், கழிப்பறை  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. 

கீழக்கரை நகரை தூய்மையாக்கும் முழு நேரப் பணியில் இருக்கும் இவர்கள், தங்கள் பகுதியில் நிலவும் சுகாதார சீர் கேட்டால், கடும் மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் கூறும் போது " இந்தப் பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டப்பட்டு, தண்ணீர் வசதி செய்து கொடுக்காமல், பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சியால் மீண்டும் மராமத்து செய்ய நிதி ஒதுக்கி பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது இப்பகுதியை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக உள்ளது. 

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சீர் கெட்டுக் கிடக்கிறது. கீழக்கரை நகராட்சியின் நிர்வாக திறமையின்மையை முதல்வர் அவர்கள் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சியர் பார்வைக்கும் கொண்டு செல்வேன். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்ய விரைவில் ஆவன செய்யப்படும்" என்று உறுதியளித்தார்.

FACE BOOK COMMENTS :
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையை பொருத்தமட்டில், இந்த புற நகர் பகுதி தான், அரசியல் சாமர்த்தியவாதிகளால், தேர்தல் நேரங்களில் மட்டும் தனிக் கவனம் செலுத்தப்படும் பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் தேர்தல் முடிந்து வெற்றி வாகை சூடியவுடன், இந்த பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

    பணத்திற்கு ஒட்டு என்ற கயவாளித் தத்துவம், இந்த ஏழைக் குடிசைகளில் மட்டும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பிழையில்லாமல் நடந்து வருகிறது. இந்த பகுதி மக்கள் இனி காசுக்காக எங்கள் வாக்குகளை, வாழ்வாதாரங்களை விற்க மாட்டோம் என தீர்க்கமான முடிவினை எடுக்கும் வரை இங்கு எதுவும் மாறப் போவதில்லை
  • தங்கராசு நாகேந்திரன் முத்துசாமிபுரத்தில் ஒரு கழிப்பறை கட்டப்பட்டு இன்னும் பயனில்லாமல் தான் உள்ளது அதை திறக்க வழி செய்ய வேண்டும். மேலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து லெட்சுமிபுரம் வரை சாலை வசதி சரியில்லை அதையும் சரி செய்ய வேன்ண்டும்
  • Mohamed Mahamood குறைகளை கேட்டாள் மட்டும் என்ன பயன் அதை திரித்து வைக்கணும்.

No comments:

Post a Comment