தேடல் தொடங்கியதே..

Sunday, 25 August 2013

கீழக்கரையில் நடை பெற்ற திருமண நிகழ்ச்சிகள் - மணமக்களை வாழ்த்தும் தருணமிது !

கீழக்கரை நகரில் கடந்த 18.08.2013 முதல் தினமும் ஓய்வில்லாது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும் திருமண நிகழ்ச்சிகளால், ஊரே கோலாகலமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் அனைத்து முஹல்லாக்களிலும் நடை பெற்று வரும்  இந்த மகிழ்ச்சி பொங்கும் மண நாள்களில், குடும்பத்தார்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், வெளியூர் தோழர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் கீழக்கரைவாசிகள் பலரும், இந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தற்காலிக விடுப்புகளில் வந்து குவிந்துள்ளனர். 


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியைக் காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

இறைவன் அருளால், இரு மனம் இணையும் இந்தத் திருமண நிகழ்ச்சியின் வழியாக,  இல்லறம் என்னும் நல்லறத்தில், அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல தருணத்தில், 

நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டு காலங்கள்
ஒற்றுமையாய் வாழ்வாங்கு வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறோம் ...

மண மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.
 திருமண வாழ்த்து துஆ.

”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

No comments:

Post a Comment