தேடல் தொடங்கியதே..

Tuesday 27 August 2013

வெளி நாடுகளில் இருந்து டி.வி வாங்கி வருவோர் கவனத்திற்கு - இந்தியாவின் புதிய இறக்குமதி வரி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

வெளி நாடுகளில் அதிகம் வசிக்கும் கீழக்கரை வாசிகள், ஊர் திரும்பும் போது மறக்காமல், ஏதேனும் புதிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி வருவது வழக்கம். ஏனெனில் அதன் நன்பகத் தன்மையும், தரமும், சற்று கூடுதலாகவே இருப்பதாக நம்பப்படுகிறது. அவ்வாறு ஆண்டுக்கொரு முறை விடுமுறைகளில் ஊர் வரும் கீழக்கரை நண்பர்கள் பெரும்பாலானோர், தங்கள் இல்லங்களுக்கு டி.வி, லேப்டாப், ஐ போன் உள்ளிட்ட உபகரணங்களை தான் அதிகமாக வாங்கி வருகின்றனர். 



ஆனால் தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் மூலம் இறக்குமதியாகும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான புதிய வரி விதிப்பு, நேற்று (26.08.2013) திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து வருவோர் தம்முடன் கொண்டு வரும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 36 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது மத்திய அரசு.

இதன் எதிரொலியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் டிவிக்களின் விற்பனை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெறும் என்று மகிழ்ச்சி தகவல் ஒரு பக்கம் இருந்தாலும், வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

மொத்த டிவி சந்தை அளவில் 10 முதல் 15 சதவீதம் வரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. வெளிநாடு சென்று வருவோர் கொண்டு வரும் டிவிக்களும் இதில் கணிசமாக அடங்கும். எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையின்படி, ஆண்டுக்கு 30 லட்சம் முதல் 35 லட்சம் பிளாஸ்மா டிவிக்களை வெளிநாட்டிலிருந்து வரி இல்லாமலோ அல்லது குறைந்த சுங்க வரி விதிப்பின் கீழோ இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.

இதனால் இந்தியாவில் சந்தை அளவு மாறாது என்ற போதிலும், இறக்குமதிகள் குறைவதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும்  ஆண்டுக்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை வளர்ச்சி எட்டும் என்றும்  அங்காடி கணிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆகவே வெளி நாடுகளில் இருந்து ஊர் திரும்புவோர், இனிமேல் எல்சிடி, எல்இடி டிவிக்களை வரி எதுவும் செலுத்தாமல் இந்தியா கொண்டு வர முடியாது. தற்போதைய புதிய இறக்குமதி வரியின் படி, ஃபிளாட் ஸ்கிரீன் டிவிக்களுக்கு 36.5% வரி மற்றும் இதர கட்டணங்களை செலுத்த வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் தொலைக் காட்சி பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதை தவிர்ப்பது நல்லது.

FACE BOOK COMMENTS : 

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல பயனுள்ள தகவல். நம் மக்கள் வெளி நாட்டு சாமான்கள் மீது கொள்ளும் அதீத பிரியத்தால் அங்கிருத்து, கண்டிப்பாக ஏதேனும் வாங்கி வர நினைக்கின்றனர். ஆனால் அது எல்லாமே இந்தியனுடைய பொருள் தான் என்பதை தாமதமாகவே புரிந்து கொள்கிறார்கள்.

    என்ன வளம் இல்லை இந்த திரு
    நாட்டில்.. எல்லாமே நம் மண்ணில் இருக்கிறது. நம் தேசத்தின் வளர்ச்சியில் நீங்கள் பங்கு கொள்ள ஆசையா? உள் நாட்டுப் பொருள்களை, சாதனங்களை வாங்குங்கள். இங்கும் தரமான பொருள்கள் எல்லாம் சந்தைபடுத்தப்படுகிறது. முதல் தர பொருள்கள் எல்லாம் ஏற்றுமதியாகிறது என்கிற களம் எல்லாம் மலை ஏறிப் போய் விட்டது.
     
  •  
  • Abdul Kader Ya ur right......

No comments:

Post a Comment