தேடல் தொடங்கியதே..

Saturday, 31 August 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த, ஜனாப். ஹனீபா, ஜனாப்.ஜாகிர், ஜனாப். யூசுப், மர்ஹூம். ஜனாப். வாச்சா முஹைதீன், ஜனாப். செய்யது இபுறாஹீம் ஆகியோர்களின் தகப்பனார் 'சூப்புக் கடை அடுமை மாமா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'Y.M.முகைதீன் அடுமை' அவர்கள் இன்று (31.08.2013) சனிக் கிழமை மாலை 4  மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். 


                      இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8 மணியளவில் இஷா தொழுகைக்கு முன்னதாக, நடுத் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுமை மாமா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


கீழக்கரை நகரில் கடற்கரை பழைய பேருந்து நிலையம் அருகாமையில் பல்லாண்டு காலமாக அடுமை மாமா சூப்புக் கடை மிகப்  பிரபலமாக நடை பெற்று வந்தது. 'ஆட்டுக்கால் சூப்பு சூப்புன்னா அது தான் சூப்பு' என்று உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி, வெளி நாட்டுக் காரர்களும் புகழாரம் சூட்டும் அளவிற்கு, சுவை மிகுந்த சூப்பினை பரிமாறியவர்கள் 'அடுமை மாமா' என்பது  குறிப்படத்தக்கது.

தொடர்புக்கு :  ஜனாப். ஹனீபா - 8807289100

FACE BOOK COMMENTS : 

1 comment:

 1. கீழக்கரை அலி பாட்சா31 August 2013 at 20:05

  அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

  வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

  நகரின் அனைத்து தரப்பு மக்களால் நன்கு அறிமுகமானமானவரும், உழைப்பால் உயர்ந்தவருமான அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் வல்ல ரங்நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

  இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

  ReplyDelete