தேடல் தொடங்கியதே..

Tuesday, 27 August 2013

கீழக்கரை நகருக்குள் புதிதாக முளைக்கும் 'விபரீத வேகத் தடைகள்' - நிகழும் விபத்துக்களை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

கீழக்கரை நகருக்குள் சாலைகள் இருக்கிறதோ.. இல்லையோ ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட வேகத்தடைகள் காணப்படுகின்றன. இவற்றுள் பல, தனியார்களால் இரவோடு இரவாக போடப்பட்டுள்ளது. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரிடம் எவ்வித முன் அனுமதியும் பெறமால், இவ்வாறு போடப்படும் வேகத் தடைகளால், விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாகி இருக்கிறது. இதனை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கண்டு கொளவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 
உதாரணத்திற்கு கீழக்கரை சீனியப்பா ஹோட்டல் அருகில் இருந்து கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி வரையிலான 600 மீட்டர் தூரத்தில் 11 வேகத்தடைகள் இருக்கிறது. கீழக்கரை நடுத் தெரு நெய்னா முஹம்மது தண்டையல் தெரு பகுதியில் 300 மீட்டர் தூரம் உள்ள பகுதியில் மட்டும் 7 வேகத் தடை உள்ளது. இது போன்ற திடீர் விபரீத வேகத் தடைகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

வேகத்தடை இருப்பதற்கான முன் எச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும், வேகத்தடையில் வெள்ளை வண்ணங்கள் இல்லாததாலும் டூவீலரில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் சரியான நேரத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், கீழக்கரை நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், இந்த திடீர் வேகத் தடைகளால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கீழக்கரை நகரில் "தடுக்கி விழுந்தால் ஒரு வேகத் தடை" எனும் அளவிற்கு உள்ளது. மேலும் இந்த வேகத் தடை சாலைகளில், ஆட்டோக்களிலும், ஆம்னிகளிலும் பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, பெரும்பாலும் முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு  உள்ளாகி விடுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாகீம் அவர்கள் நம்மிடையே பேசும் போது,

"கீழக்கரையில் வாகன போக்குவரத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நகரின் உட்புற சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் கீழக்கரை நகராட்சியினர் வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விசயமாகும்.

ஆனால் கீழக்கரையில் பெரும்பாலான இடங்களில், நகராட்சி நிர்வாகத்தினரிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சில தனியார்கள் இரவு நேரங்களில் திடீரென தங்கள் வீட்டு வாசல் அருகாமைகளில் வேகத் தடைகளை அமைத்து விடுகின்றனர். இதனால் விபத்துக்களை தடுக்க நினைத்து அமைக்கப்படும் வேகத் தடைகளே, விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. 

நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல், வேகத் தடைகள் அமைக்க முடியாது என்பது கூடுதல் தகவல். அது மட்டுமல்ல, அவ்வாறு சட்ட விரோதமாக அமைக்கப்படும் வேகத் தடைகளில் உயரம் 1 அடிக்கு மேல் உயர்ந்து திமில் போல் காட்சியளிக்கிறது. விபத்துக்களை தடுக்க வேகத்தடைகள் அமைக்க சொன்னால், அணைக் கட்டுகளை ரோட்டில் கட்டியுள்ளனர்.

பைக்குகளில் வருவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பலர் வேகத் தடைகளை கடக்க முடியாமல் நிலை குலைந்து கீழே விழுவது அதிகரித்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வருவோர், வேகத் தடை இருப்பது  தெரியாமால் அவதிபடுகின்றனர். கர்ப்பிணி பெண்கள் வாகனங்களில் செல்ல முடியவில்லை. ஆகவே பள்ளிகள், மருத்துவனை பகுதிகள் மற்றும் அத்தியாவசியமான இடங்கள் தவிர்த்து மற்ற வேகத் தடைகளை உடனே அகற்ற, நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்" என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

FACE BOOK COMMENTS :
 • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இன்னும் ஒரு சில ஆண்டுகளில் வேகத்தடைக்கு புகழ் பெற்ற நகரமாக கீழக்கரை உருவானாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் வேகத் தடைகள் இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முனைப்பு காட்டும் நகராட்சி கொஞ்சம் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.

2 comments:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்27 August 2013 at 21:27

  பின் விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் அதி புத்திசாலி மேதாவிக்கள் நடு இரவில் செய்யும் தில்லாலங்கடி வேலை

  அடுத்து, குடிநீர் அதிக அழுத்தம் இல்லாமல் வினியோகிப்பதால், நிறைய வீடுகளில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படுவதால்,சந்துக்களில் உள்ள வீடுகளுக்கு குடி நீரே வருவதில்லை.

  இது மக்களே மக்களுக்கு செய்யும் தீமை. இதைத் தான் சொந்தக் காசில் சூனியம் வைத்து கொள்வது என்று சொல்வார்களோ?

  ReplyDelete
 2. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
  கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

  ReplyDelete