தேடல் தொடங்கியதே..

Thursday 29 August 2013

கீழக்கரையில் நள்ளிரவில் பலத்த இடியுடன் கூடிய மின்னல் - மழை பெய்யாததால் பொது மக்கள் ஏமாற்றம் !

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று (28.08.2013) பரவலாக மழை பெய்துள்ளது. ஆனால் கீழக்கரை நகரில் மட்டும் அனல் பறக்கும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் லேசான குளிர் காற்று வீசத் துவங்கியது. நள்ளிரவு 1 மணி முதல் 1.30 மணி வரை  பலத்த சப்தத்துடன் இடி முழக்கம் இடை வ்கிடாது ஒலித்தது. 

கண்ணை பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னல் வெட்டியது. இதனால் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். 'இன்று அடை மழை நிச்சயம்' என அனைவரும் மகிழ்வுடன் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி மழை பொழிவு மட்டும் இல்லாததால் பொது மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 


கீழக்கரை நகரில் சரியான மழை இல்லாத காரணத்தால், ஊர் முழுவதும் கடும் வறட்சிக்கு தயாராகி விட்டது. பலரது வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், பள்ளிவாசல், உறவினர்களின் வீடுகளுக்கு சென்று குளிக்கவும், துணி துவைக்கவும் செய்கின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் மோசமான சூழல் உருவாகும் நிலை உள்ளது. 

கீழக்கரையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை வேண்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறப்புத் தொழுகையும் நடை பெற்றது. ஆகவே நம் கீழக்கரை நகருக்கு நல்ல மழைப் பொழிவை, விரைவில் இறைவன் வழங்கிட அனைவரும் பிரார்த்திக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

FACE BOOK COMMENTS :

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' யா அல்லாஹ்.. எங்கள் ஊருக்கு நல்ல மழையை தந்தருள் ரஹ்மானே.. எங்களுடைய பாவங்களா, குற்றம் குறைகளை மன்னித்து, இப்புவியில் வாழ வைத்தருள் வல்லோனே.. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
     
  • Keelai Ilayyavan ஆமீன்... ஆமீன்....
     
  • Barakath Ali 2:19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
     
    2:22 الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
     
    2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
     
    2:264 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

    2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; 
     
    அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
     
  •  
    ரசூல் ஸல்லலாஹு அவர்கள் சொல்லிச் சென்ற வழி முறைகளை மறந்து மகர் கொடுத்து பெண் கேட்பதற்கு பதிலாக மாப்பிள்ளை கேட்டு போவது. 
     
    தன் வீட்டிற்கு மனவியை அழைத்து வருவதற்கு பதில் மனைவி வீட்டில் தஞ்சம் புகுவது, 
     
    அன்னிய பெண்களான கொழுந்தியாள்கள் இருக்கும் வீட்டில் அதிகாரத்துடன் வீடு நுழைவது மற்றும் மச்சினி என்ற முறையில் கேளியும், கிண்டலும் செய்வது, 
     
    புனித ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து வட்டிக்கு கொடுப்பது, 
     
    ஏக வல்லவனை திருப்தி படுத்துவதாக நினைத்துக் கொண்டு வட்டி பணத்தில் ஆடம்பரமாக நோன்பு கஞ்சி கொடுப்பது அதுவும் இறை இல்லத்திலேயே....
     
    நிலை கெட்ட, இறை அச்சம் இல்லாதவ்ர்களால் ஜமாஅத்தை நிருவகிப்பது, 
     
    இப்படி பல நடப்பதால் என்னவோ காஞ்சிரக்குடி, ஏர்வாடி வரை பெய்யும் மழை கீழக்கரையில் இல்லையே. இறைவா தவ்பாச் செய்கிறோம். ஏற்று அருள்பாலிப்பாயாக், ஆமீன்
     

  • A.s. Traders கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ; ஆமீன்... ஆமீன்....

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா29 August 2013 at 18:25

    ரசூல் ஸல்லலாஹு அவர்கள் சொல்லிச் சென்ற வழி முறைகளை மறந்து மகர் கொடுத்து பெண் கேட்பதற்கு பதிலாக மாப்பிள்ளை கேட்டு போவது. தன் வீட்டிற்கு மனவியை அழைத்து வருவதற்கு பதில் மனைவி வீட்டில் தஞ்சம் புகுவது, அன்னிய பெண்களான கொழுந்தியாள்கள் இருக்கும் வீட்டில் அதிகாரத்துடன் வீடு நுழைவது மற்றும் மச்சினி என்ற முறையில் கேளியும், கிண்டலும் செய்வது, புனித ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து வட்டிக்கு கொடுப்பது, ஏக வல்லவனை திருப்தி படுத்துவதாக நினைத்துக் கொண்டு வட்டி பணத்தில் ஆடம்பரமாக நோன்பு கஞ்சி கொடுப்பது அதுவும் இறை இல்லத்திலேயே, நிலை கெட்ட,இறை அச்சம் இல்லாதவ்ர்களால் ஜமாஅத்தை நிருவகிப்பது, இப்படி பல நடப்பதால் என்னவோ காஞ்சிரக்குடி, ஏர்வாடி வரை பெய்யும் மழை கீழக்கரையில் இல்லையே. இறைவா தவ்பாச் செய்கிறோம். ஏற்று அருள்பாலிப்பாயாக், ஆமீன்

    ReplyDelete