தேடல் தொடங்கியதே..

Thursday 29 August 2013

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் திடீரெனெ கொட்டப்பட்ட 'மணல் குவியல்' - நகருக்குள் பேருந்துகள் வராததால் பொது மக்கள் கடும் அவதி !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் (ஸ்டார் மெடிக்கல் அருகாமையில்) நண்பகல் 1.30 மணியளவில் திடீரெனெ கொட்டப்பட்ட கட்டுமான மணல் குவியலால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. எந்நேரமும் போக்குவரத்து அதிகம் இருக்கும் இந்த சாலையில் கொட்டப்பாட்ட இந்த மணல் குவியல் விரைந்து அள்ளப்படாததால், ஊருக்குள் கடற்கரை வரை வந்து செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடைபட்டது. இதனால் கடற்கரை பெட்ரோல் பங்க், நடுத் தெரு ஜும்மா பள்ளி உள்ளிட்ட இடங்களில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். 




இது குறித்து சமூக ஆர்வலர். செய்யது காசீம் அவர்கள் கூறும் போது "வீடு கட்டும் காண்டிராக்டர்கள், மற்றும் வீட்டின் உரிமையாளர்கள், யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டுமானப் பொருள்களை கையாள வேண்டும். இது போன்று மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரத்தில், நடு ரோட்டில் மணலை கொட்டி செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதனால் இராமநாதபுரம், ஏர்வாடி போன்ற ஊர்களுக்கு செல்ல காத்திருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்டால், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்களாம்.. இது போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் அனுமதிக்க கூடாது." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.



இது குறித்து கீழக்கரை ரோட்டரி கிளப் நிர்வாகி ரோட்டரியன் செய்யது அஹமது அவர்கள் கூறும் போது "இது போன்று கட்டுமான பொருள்களை சாலைகளில் கொட்டி, பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல், ஜல்லி போன்றவற்றை அனுமதியில்லாமல் கொட்டும் போது, அந்த வாகனங்களை பறி முதல் செய்ய வேண்டும் அல்லது SPOT FINE போட வேண்டும். 

மீண்டும் அதே நபர்கள், இந்த தவறை செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று ஊருக்குள் பேருந்து வராததால் கை குழந்தைகளுடன், காத்திருந்து பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா..? இதற்கெல்லாம் நகராட்சி நிர்வாகத்தினர் பதில் சொல்லியே ஆக வேண்டும்." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

FACE BOOK COMMENTS :
  • Mohamed Irfan நகருக்கு தேவையான எந்த செயலையும் செய்யாத நகராட்சி எதுக்கு...............
  • Mohamed Quraishi na[r]garaatchjyin spl 2nd news today thanks keelai ilaiyavan avargale
  • Barakath Ali Thohuthiku ethuvum seiyaatha MLA namakku etharku
  • King Haji ஊரில் மாடு படுத்தாலும் ஆட்டுக்குட்டி ஓடினாலும் நகராட்சியே குறை கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ள கூட்டம் நிறைய இருக்கிறது . நகராட்சியே குறை கூறுவதற்கு முன்பு தொழுதி எம் எல் நம்ம ஊருக்கு அவருடைய நிதியில் இருந்து என்ன செய்து விட்டார் ? மாதம் மாதம் வந்து வழக்கமான அரசியல் வாதிகள் செய்யும் செயலை தான் செய்து வருகிறார் , ஒரு அறிக்கை ரெம்ப கஷ்டம் .
  • King Haji மண்ணை நடு ரோட்டில் கொட்டி வைத்தது யாருடைய குற்றம் . இது போன்ற மண்ணை கொட்ட்டியவர்களுக்கு இனி வரும் காலங்களில் அதிக அபராதம் விதிக்க வேண்டும் . அதை விட்டு இதை கூட அரசியல் ஆக்காதின்கப்பா சிரிப்பு வருகிறது
  • Hussain Jahangeer இதோ பாருடா, சூப்பர் நகராட்சி நிர்வாகமும், அதன் ஆதரவாளர்களும். கீழக்கரை வெளங்கும்.
  • King Haji தா மூ கா கட்சியே கீழகரை இருந்து ஒழித்த கூட்டத்தின் சத்தம் அதிகமாக இருகிறது இப்படி கத்தி கத்தி எத்தனை ஒட்டு வாங்கினிங்க மீநியா நாத்தம் நீங்க தானே அது போங்க தம்பி காத்து வரட்டும்
  • Hussain Jahangeer கொள்ளையடித்த ஊழல் பணம் இவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ?நல்லா அடிக்கிறீங்க ஜிங்குசாங்!
  • King Haji செம காமடி ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளத்தி இந்த பாடல் தான் நியாபகம் வருகிறது . சம்மந்தம் இல்லாம வாந்தி எடுக்காதிங்க
  • Hussain Jahangeer இப்போதைய நகராட்சியின் கேடுகெட்ட நிர்வாகத்தால் ஊரெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை ஆற்றின் நாற்றம் எங்களை வாந்தியெடுக்கத்தான் செய்யும். உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அந்த சாக்கடை கமகமவென மணக்கும்!
  • Hussain Jahangeer யாராக இருந்தாலும் கொள்ளையடித்தவர்கள் ஒருநாள் சிறை செல்லவேண்டும்.
  • King Haji என்னமோ கிளைகரை இதற்க்கு முன்பு சோலைவனமாக இருந்தமாதிரி இப்ப தான் குப்பை காடாக இருப்பது போலும் பேசுறிங்களே அருசி . ஊருனா சாக்கடை உடைந்து ஓடுவதும் சரிசெயயபடுவதும் இயல்பு தான் அதை விட்டு உங்களுடைய அரசியலுக்காக ஊரை ஏன் கேவலபடுத்துரிங்க , இராமநாத புறம் பொய் பாருங்க நம்ம ஊரு தங்கம் .

    உங்களுடைய ஆதங்கத்தில் ஊருடைய அக்கறை இல்லவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது .உங்களுடைய தனிப்பட்ட தோல்வின் பலி உணர்வு தான் தெரிகிறது
  • Hussain Jahangeer கீழக்கரையின் நிர்வாக அவலங்களை பக்கம், பக்கமாய் செய்தி வாசிக்கும் மீடியாக்களுக்கு மத்தியில் இப்படி வக்காலத்து வாங்கும் போதே நினைத்தேன். ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லையே என்று!
  • King Haji நீங்க போனதடவை வாங்கியதற்கு தானே இந்த தடவை அல்லாக்க எடுத்து மல்லாக்க போட்டாங்க . உண்மையே பேசினால் ஏன் என்னை இந்த சாக்கடைக்குள் இழுக்குறிங்க .உங்களுக்கு தோதான இடத்தில் நீங்கள் இருகிறிங்க நீங்களே இருங்கள் இப்படி குறை கூறி கொண்டே
  • கீழக்கரை ஆஹா,ஒஹோ,பேஸ்,பேஸ்,சுத்தமும்,சுகாதாரமுமாய் குட்டி சிங்கப்பூராக சூப்பராய் இருக்குது.வாழ்க நகராட்சி நிர்வாகம்!King Haji>இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே?
  • King Haji கிழக்கரை என்னக்கி சுத்தமா இருந்துச்சி என்று தான் சொன்னேன் .இப்பையும் இப்படி தான் அப்பையும் அப்படி தான் . நான் சொல்லியதில் தவறு இருக்கிறதா ?
  • King Haji கிழக்கரை என்னைக்கும் இப்படி தான் இருக்கும் இப்படி இருவரை ஒருவர் குறை கூறி கொண்டு இருந்தால் .
  • HussainJahangeer King Haji> என்னுடைய ஆதங்கம் என்னவென்றால்,ஆளும்கட்சி நிர்வாகமாய் இருந்து கொண்டு இன்னும் ஊரை இப்படியே வைத்திருந்தால் எப்பத்தான் ஊருக்கு விடிவுகாலம் வரும்?சமீபத்தில் ஊரில் இருந்து சவூதிக்கு வந்துள்ள சகோதரர் ஒருவர் ஊரின் சுகாதாரத்தைப் பற்றி மிகவும் வேதனையாக சொன்னார்.அவரது பேச்சை கேட்டதும் விடுமுறையில் ஊர்வரும் எண்ணத்தையே தற்போது மாற்றிக்கொண்டேன்.
  • Hussain Jahangeer King Haji> என் மீதான நம்பிக்கையில் வார்டு தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும்,வாக்களிக்காத மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் தோற்கடிக்கப்பட்டதால் தான் தற்போது சவூதிஅரேபியாவில் பணிபுரிந்து கொண்டு மூன்று உம்ராவையும் முடித்து விட்டு இன்ஷாஅல்லாஹ் இவ்வருட ஹஜ்ஜிக்கும் செல்ல இருக்கிறேன்.துஆ செய்யுங்கள்.
  • King Haji நானும் ஊருக்கு சென்று இருந்தபோது முன்பு இருந்ததிற்கு ஊரு ஒரு அளவிற்கு பரவா இல்லை என்று தோணியது .

    ஒரு கை சத்தம் போட்டால் என்ன ஆகும் ஊரில் உள்ளவரக்ள சேர்மனுக்கு சப்போர்ட் பண்ணினால் அவர்களுக்கும் இன்னும் நன்றாக பண்ணவேண்டும் என்று எண்ணம் வரும் அதை விட்டு விட்டு பண்ணினாலும் குறை பன்னவிட்டாலும் குறை சொன்னால் நீங்கலாக இருந்தாலும் நானாக இருந்தாலும் ஊரை முழுமை படுத்த முடியாது
  • King Haji //// Hussain Jahangeer ///அரசியல் வாதியாகவே மாரிவிட்டிர்கள் அருசி . அடுத்த தடவை தா மூ கட்சியா இல்லை எஸ் டி பி யா எதை தேர்ந்தெடுக்க உள்ளீர்கள்
  • தங்கராசு நாகேந்திரன் அந்த நானே கார் யாருடையது நம்ம ஆசாத் எஞ்சினியருடையதா
  • Barakath Ali Ooru ippadi ponathuku kaaranam tmmk katchithaan

No comments:

Post a Comment