தேடல் தொடங்கியதே..

Wednesday, 28 August 2013

கீழக்கரை 'சேது கேஸ் ஏஜென்சி' மீது மாவட்ட கலெக்டரிடம் புகார் - சாலைகளில் ஆபத்தான முறையில் அடுக்கி வைக்கப்படும் கேஸ் சிலிண்டர்களை அகற்ற நடவடிக்கை !

கீழக்கரை நகரில் சின்னக்கடை தெரு சாலை, வள்ளல் சீதக்காதி சாலை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், சேது கேஸ் ஏஜென்சி நிறுவனத்தினர், கேஸ் நிரம்பி இருக்கும் சிலிண்டர்களை, அடுக்கி வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏபடுகிறது. மேலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் இந்த பிரதான சாலைகளை கடந்து செல்வதால், விபரீதங்கள் ஏற்பட்டு விடுமோ..? என்கிற அச்சம் தொடர்ந்து வாட்டுகிறது.


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் சிறுவர்கள் நடமாடும் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் 'கேஸ் சிலிண்டர்கள்' - விபரீதம் நடைபெறும் முன் அகற்றப்படுமா ?


இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் சேது கேஸ் ஏஜென்சி மூலம் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் கேஸ் சிலிண்டர்களை அகற்றுவது குறித்து புகார் மனு அளித்துள்ளனர், இது சம்பந்தமாக மாவட்ட வழங்கல் அலுவலர், விசாரித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment