தேடல் தொடங்கியதே..

Monday, 12 August 2013

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள் - 'ஒரு தலை' பட்சமாக செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகள் மீது பொது மக்கள் குற்றச்சாட்டு !

கீழக்கைர நகராட்சியின் அறிவுறுத்தலின் படி நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் கீழக்கரை காவல் துறையினரின் முன்னிலையில் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக கடற்கரை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதனை கீழக்கரை நகராட்சி கமிஷனர் அய்யூப் கான் மற்றும் சுகாதார ஆய்வாளர். திண்ணாயிர மூர்த்தி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். இதனால் தற்போது கீழக்கரை மெயின் ரோடு பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில் கடை வைத்திருக்கும் 'கண்மணி ஹார்டுவேர்ஸ்' சீனி அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகராட்சியினர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவசர அவசியமாக செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் முடங்கி கிடக்கிறது.

இப்போது இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தேவையற்றது. இது ஒரு கண் துடைப்பு தான். ஒரு வேலை இதனை வரவேற்கத்தக்க விசயமாக நாம் கருத்தில் கொண்டாலும், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் ஒருதலை பட்சமாக நடப்பது, சிலருடைய இடங்களில் மட்டும் வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுவது, வேறு சிலருடைய கடைகள் முன்னதாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதனால் நகராட்சிக்கு ஏதிராக மக்களை போராடத் தூண்டுவதாகவே அமையும். இதை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடக்க வேண்டும்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் அய்யூப் கான் அவர்கள் கூறும் போது..

 "கீழக்கரை நகரின் மிக முக்கிய சாலையாக இருக்கும் இந்த பகுதியில்  பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக, இருக்கும் ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றி வருகிறோம்.

இதில் எந்தவித பாரபட்சமும் நடை பெறவில்லை. மக்கள் நலனை மனதில் கொண்டு அனைத்து ஆக்கிரமிப்புகளையும் களைந்து,

இந்த வள்ளல் சீதக்காதி சாலையை போக்குவரத்திற்கு உகந்த சாலையாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதில் சட்ட விதிகள் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளது. " என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment