தேடல் தொடங்கியதே..

Wednesday, 14 August 2013

கீழக்கரை ஜெட்டிப் பாலம் அருகே கரை ஒதுங்கிய அரிய வகை 'கடல் வாழினம்' - ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள் !

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து கடல் வாழ் உயிரினப் பூங்காவை உருவாக்கியுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினப் பூங்கா இதுதான். இதுவரை இந்த பூங்காவில் 3600க்கும் மேற்பட்ட கடல் தாவரங்களும், உயிரினங்களும், 117 வகையான பவளப் பாறைகளும் இங்கு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை பகுதியில் அடிக்கடி அபூர்வமான கடல் உயிரினங்கள் கரை ஒதுங்குவதும், மீனவர்கள் வலையில் சிக்குவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

தற்போது கீழக்கரை கடற்கரையில் இருக்கும் புதிய ஜெட்டி பாலம் அருகே, இரண்டரை அடி நீளமுள்ள அபூர்வமான கரும் புள்ளிகளுடன் கூடிய ஒரு கடல் வாழ் உயிரினம் கரை ஒதுங்கியுள்ளது. அதனை கடற்கரையில் காற்று வாங்க வந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான மொத்தம் 560 சதுர கி.மீ பரப்பளவில் மன்னார் வளைகுடாப் பகுதியில் நீண்ட கடற்கரையோரம் இது போன்ற அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. கடந்த 1986 ஆம் ஆண்டு இந்த வளைகுடாப் பகுதியில் இருக்கும் அப்பா தீவு, வாழை தீவு, முசல் தீவு உள்ளிட்ட 21 தீவுகளை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காக்காவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவும் அதைச் சுற்றியுள்ள 10 கி.மீ பகுதியும் BIOSPHERE RESERVE ஆக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

                                       தகவல் : வடக்கு தெரு NASA, கஃபார் கான் 

No comments:

Post a Comment