தேடல் தொடங்கியதே..

Friday, 16 August 2013

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி - போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது !

கீழக்கரை மேலத் தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கத்தின், அருமையான மேற்பார்வையின் கீழ் கல்வி சேவை ஆற்றி வரும் ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நேற்று (15.08.2103) காலை 9 மணியளவில், நாட்டின் 67 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெற்றது.
இந்த விழாவிற்கு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கத்தின் உறுப்பினரும், பள்ளியின் முன்னாள் தாளாளரும், இஸ்லாமி பைத்துல் மாலின் செயலரும், குத்பா கமிட்டியின் உதவி செயலாளருமான ஜனாப். M.K.M.அப்துல் மலிக் அவர்கள் தலைமையேற்று, தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியை ஜனாபா.A ஹமீது நிசா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின்  அங்கத்தினர்கள் மற்றும் சங்க மேலாளர் கலந்து கொண்டனர்.பள்ளியின் ஆசிரியை A.ஷீபா அவர்கள் சிறப்புரையாற்றினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த விழாவின் போது, பங்கேற்ற மாணவ மணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் நன்றியுரையுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.No comments:

Post a Comment