தேடல் தொடங்கியதே..

Friday 27 September 2013

கீழக்கரையில் 'மழைத் தொழுகை' - ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் அறிவிப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்க இருக்கும் 'மழைத் தொழுகை' எதிர் வரும் ஞாயிற்று கிழமை (29.09.2013) காலை 8 மணியளவில் பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த அவசியமான மழைத் தொழுகையில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நடுத் தெரு ஜும்மா பள்ளி, வடக்குத் தெரு ஜும்மா பள்ளி, தெற்குத் தெரு ஜும்மா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மழைத் தொழுகை குறித்த அறிவிப்பு நோட்டீஸும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

2 comments:

  1. கீழக்கரை அலி பாட்சா27 September 2013 at 21:11

    ரஹீமாகவும் ரஹ்மானாகவும் இருந்து அருள் மழை பொழியும் யா அல்லா, யா ரப்பே, ஏகனே, எங்கள் நாயனே

    ஆன்றோர்களும், சான்றோர்களும், தரும சீலர்களும் (கடந்த ரமலான் நிகழ்வுகளே சாடசி) நிறைந்து வாழும் வாழும் கீழக்கரையில் இன்ஷா அல்லா எதிர் வரும் ஞாயிறு காலையில் பழைய குத்பாப் பள்ளிதெரு மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் மழைக்கான தொழுகையிலும், பிரார்த்தனையிலும் பங்கு கொள்ள ஆண்களும், பெண்களும் அணி அணியாக திரள இருக்கிறோம்.

    அவ்வமையம் ஆதவனைக் கண்ட பனிமலை உருகுவது போல உள்ளம் உருக மழை வேண்டி இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோம். அதனை கபூல் செய்து எங்களை ரட்சிப்பாயாக. நீரின்றி நாங்கள் ப்டும் துயரங்களை (குறிப்பாக எங்கள் பெண் மக்கள்) படைத்த நீயே நன்கு அறிவாய். அதற்கு பரிகாரம் அளிப்பவன் நிச்சயமாக, திண்ணமாக நீ ஒருவன் மாத்திரமே.

    உனை மறந்து, ரசூலே கரீம் சொன்ன மார்க்க வழி முறைகளை மனதளவில் அறிந்தும் எதிர்மறையாக செயல் படுபவர்களின் மீதுள்ள கோபத்தின் காரணமாக ஏனையோரை தண்டித்து விடாதே.அதனை தாங்கிக் கொள்ளும் சக்தி நிச்சயமாக எங்களுக்கு இல்லை.

    நீயோ மன்னிப்பாளன். உனது ஹபீப் கண்மணி செய்யதினா முகம்மது நபி ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் உம்மத்கள் பாவ மன்னிப்பு கோருவதையும், தேவைகளை உன்னிடம் பொருப்பு சாட்டுவதையும் பெரிதும் விரும்புவன்.

    1:5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
    1:5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்
    1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
    1:6. நீ எங்களை நேரான வழி யில் நடத்துவாயாக!

    எங்கள் கண்ணீரை பன்னீராக மாற்றுவாயாக யா ரப்பில் ஆலமீனே. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சா28 September 2013 at 20:47

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு

    வல்ல ரஹ்மானின் சாந்தியும் சமாதானமும் குறைவின்றி நம் அனைவரும் மீது உண்டாவதாக, ஆமீன்.

    இன்ஷா அல்லா விடியப் போகும் காலைப் பொழுது (29/09/2013 ஞாயிறு) நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் இனிய பொன்னான நேரம். மழை இன்மையால் ஏற்பட்டிருக்கும் துன்பத்திற்கு ஏக இறையோனிடம் பரிகாரம் தேடி தொழுது மன்றாட இருக்கும் அரிய சந்தர்ப்பம்.

    அவ்வமையம் எனதருமை கீழ்க்கரை வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே, இளைய சமுதாயமே, பழைய குத்பாப் பள்ளி தெரு மஹ்தூமியா பள்ளி வளாகத் திடலில் பழைய குத்பாப் பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்க இருக்கும் மழைத் தொழுகையிலும் அதனை தொடர்ந்து கல்பு உருக கண்ணீர் மல்க படைத்த நாயனிடம் பொருப்பு சாட்டி பரிகாரம் கேட்கும் துவாவிலும் அலை அலையாக திரண்டு வந்து பங்கேற்க அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    குறிப்பாக பெண்மணிகளின் பங்கு அதிகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது எனது தீராத ஆவல்.காரணம் வீட்டு கிணறுகளில் நீரின்மையால் படும் வேதனை, துன்பங்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

    வஸ்ஸலாம்.

    ReplyDelete