தேடல் தொடங்கியதே..

Thursday, 7 November 2013

கீழக்கரையில் '105 வயது' மூத்த குடிமகனாரின் (வபாத்து) மரண செய்தி !

கீழக்கரை தெற்குத் தெரு பள்ளி ஜமாத்தை சேர்ந்த மூத்த உறுப்பினரும், ஜனாப். சேட் என்கிற சேகு சீனி இபுறாகீம் அவர்களின் மாமனாரும், மர்ஹூம்.செய்யது முஹம்மது ஆலீம், மர்ஹூம்.அஜ்மீர் பாதுசா, முஹம்மது ஹாஜர் பீவி, துரதுல் பைலா பீவி, ஜென்னத்துல் பிர்தவுஸ், முஹம்மது வருசை பாத்திமா ஆகியோர்களின் தகப்பனாருமாகிய 'அக்கலா மறைக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 105 வயதுடைய, முக்காணி கினா.முனா.செனா செய்யது முஹம்மது தம்பி அவர்கள் இன்று (07.11.2013) நண்பகல் சுமார் 12 மணியளவில், கீழக்கரை தெற்குத் தெருவில் உள்ள அவர்கள் இல்லத்தில் வாபாத்தாகி விட்டார்கள்.
 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).  

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (08.11.2013) காலை 9 மணியளவில், கீழக்கரை சேகப்பா மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூம்.அக்கலா மறைக்கா மாமா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


 படங்கள் : கீழக்கரை தெற்கு தெரு முஸ்லிம் பொது நல சங்க வலை தளம்


தொடர்புக்கு :

ஜனாப். சேட் என்கிற சேகு சீனி இபுறாகீம் - 9994521812

கீழக்கரையில் கடந்த வருடம் நாம் வெளியிட்டிருந்த 110 வயதுடைய இளைஞரின் வபாத்து (மரண) செய்தியினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


3 comments:

 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

  ReplyDelete
 3. கீழக்கரை அலி பாட்சா7 November 2013 at 18:02

  அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

  வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

  அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

  இந்த அன்பு மாமனிதரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திகின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

  ReplyDelete