தேடல் தொடங்கியதே..

Monday 4 November 2013

கீழக்கரை நகராட்சிக்கு இன்றும் தொடரும் 'தீபாவளி விடுமுறை' - அதிகாரிகள் இல்லாததால் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் !

தமிழகம் முழுவதும் தீபாவளி விடுமுறையை மகிழ்வுடன் களித்த அரசு அலுவலர்கள், இன்று நேரம் காலத்துடன் அலுவலகங்களுக்கு வந்து (புதிய உற்சாகத்துடன்..!)  தங்கள் வேலைகளுக்கு திரும்பி பணியாற்றி வருகின்றனர். ஆனால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு மட்டும் இன்று (04.11.2013) திங்கள் கிழமையும் தீபாவளி விடுமுறை தொடர்கிறதா? என என்னும் அளவிற்கு, அலுவலர்கள் இல்லாமல் அலுவலகமே வெறிச்சோடி கிடக்கிறது.




ஹலோ ஹலோ.. நாங்கல்லாம் கலெக்டர் கூட மீட்டிங் லே இருக்கோம். ஓவர் ஓவர் 


இந்த  செய்தி வெளியிடும் நேரமான காலை  11.45 மணி வரைக்கும் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரோ, தலைமை அலுவலரோ, சுகாதார ஆய்வாளரோ காணக் கிடைக்காமல் பொதுமக்கள் தங்கள் மனுக்களுடன் அலைந்து திரிந்ததை காண முடிந்தது.

கீழ் மட்ட வரி வசூலிப்பாளர்கள் சிலரும், துப்புரவு பணியாளர்கள் சிலரும் மட்டுமே தென்பட்டனர். நகராட்சி அலுவலகத்திலுள்ள அலுவலர்களின் இருக்கைகளும் காலியாக இருந்தது.




இது குறித்து கடந்த ஆண்டு நாம் வெளியிட்ட பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.


'மக்களுக்காக உழைப்பதும் தீபாவளி தான்..', என தீபாவளி பண்டிகை தினத்திலும் கூட மக்கள் பணியாற்றிய எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட அரசு அலுவலர்களின் உன்னதமான சேவைக்கு மத்தியில், இது போன்ற வேலைகளை ஒ.பி. அடிக்கும் வஞ்சக செயல், பொதுமக்கள் மத்தியில் கடும் வெறுப்பினை சம்பாதித்துள்ளது. 

2 comments:

  1. கீழக்கரை அலி பாட்சா4 November 2013 at 18:39

    மாவட்ட ஆட்சியருடன் நேர்காணல் என்பது வழக்கமான ஒன்றே. ஆனால் அது நடக்கும் நாள் சில நாட்களுக்கு முன் தீர்மானிக்கப்படுவது. சில மணி நேரத்திற்கு முன்பு அல்ல அப்ப்டி இருக்கையில் அதை அறிவிப்பாக உள் கூடத்தில் வைத்து இருந்தால் போது மக்களுக்கு செய்தி பரவி வீண் அலைச்சலையும், ஆட்டோவுக்கு தண்ட செலவையும் தவிர்க்க ஏதுவாக இருந்திருக்கும். மேலும் தொலை பேசி அழைப்புகளுக்கும் முறையான பங்களிப்பு இல்லை.

    நடந்ததை மறப்போம். இனியாவது நடப்பவை நல்லவையாக இருந்து மக்களுக்கு பொறுப்புடன் சேவை செய்யட்டும்.மக்கள் வரிப் பணத்திலிருந்து வாங்கும் சம்பளம் பூரணமாக ஜீரணிக்கட்டும்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சா4 November 2013 at 18:45

    மேலும் அலுவலகமே காலியாக இருக்கும் அளவுக்கு ஒட்டு மொத்தமாக அனைத்து ஊழியர்களும் அழைக்கப்ப்டுவதில்லை / செல்வதில்லை

    ReplyDelete