தேடல் தொடங்கியதே..

Monday 4 November 2013

கீழை இளையவன் வலை தள செய்தி எதிரொலி - சாலை தெருவில் குவிந்து கிடந்த அபாய கற்கள் உடனடியாக அகற்றம் !

கீழக்கரை சாலை தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும், கீழக்கரை நகராட்சியின் ஒப்பந்த பணிகள் நடைபெற்றது. அப்போது ஜேசிபி இயந்திரத்தால் சாலை உடைக்கப்பட்டு, அதன் கற்கள், தெரு முழுவதும் அலங்கோலமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலை தெரு பகுதி பெண்கள், பள்ளி சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில், பள்ளத்தில் சிக்கிய ஒரு குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் வேன் கவிழும் சூழல் ஏற்பட்டது.



இது குறித்து நாம் நேற்று வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இந்நிலையில் நாம் வெளியிட்டிருந்த செய்தியின் எதிரொலியாக இன்று காலை, இந்த பகுதியின் கவுன்சிலர் 12 வது வார்டு சித்தீக் அலி அவர்களின் துரித ஏற்பாட்டின் பேரில், நகராட்சியின் ஒத்துழைப்போடு, சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து சிமெண்ட் ரோடு வரை அலங்கோலமாய் குவிந்து கிடந்த ஆபத்தான கற்குவியல்கள், அப்புறப்படுத்தப்பட்டு, தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்பட்டு வருகிறது. 


இது குறித்து நம்மிடையே பேசிய சாலை தெருவை சேர்ந்த சீனி ஆலீம் அவர்கள் கூறும் போது " இந்த பகுதியில் தோண்டி போட்ட கற்களால் சாலை தெரு மக்கள், நடக்க கூட முடியாமல் பெரும் துயரப்பட்டு வந்தனர். மேலும் இந்த பகுதியில் வரும் வாகனங்களும், இரு சக்கர வாகனம் ஓட்டி வருவோரும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இது  குறித்து சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும் முகமாக விழிப்புணர்வு செய்தி வெளியிட்ட கீழை இளையவன் வலை தளத்திற்கும், உடனடியாக வேலைகளை முடுக்கி விட்ட நகராட்சிக்கும், 12 வது வார்டு உறுப்பினர் சித்தீக் அலி அவர்களுக்கும், ஒப்பந்ததாரர் பழனிக்கும், சாலை தெரு மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா4 November 2013 at 18:13

    இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பாக் நாம் நன்றி பாராட்டியே ஆக வேண்டும்.

    மிகுதியான மக்கள புழங்கும் இந்த சாலையில் ஓட்டு போட்ட மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரப் பட்டபின் மீடியாக்களில் வந்தப் பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இது அப் பகுதி வார்டு உறுப்பினரின் தார்மீக கடமை இல்லையா? இனியாவ்து இது போல் இல்லாமல் பொருப்புடன் செயல் பட வேண்டுகிறேன்.

    இது விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டி உடனடியாக தீர்வு காண உதவிய கீனா வானாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். உங்களின் இது போன்ற செயல் வேகம் அயர்வில்லாது தொடர இதயம் கனிந்த வாழ்த்துகள்.

    ReplyDelete