தேடல் தொடங்கியதே..

Saturday, 9 November 2013

கீழக்கரை சாலை தெருவில் 'இப்போதே' பல்லை காட்டும் பைப்புகள் - தரமற்ற பணிகளால் பொது மக்கள் எரிச்சல் !

கீழக்கரை சாலை தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிக்கப்பட்ட கழிவு நீர் பைப்புகள், நகராட்சி செய்து முடித்ததாக சொல்லப்படும் பணிகளின் தரம் இப்போதே பல்லை காட்ட ஆரம்பித்து விட்டது.  முறையாக ஆழப்படுத்தி தோண்டப்பட்டு குழாய்கள் பதிப்பட்டாத காரணத்தால் குழாய்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவர்கள் இதன் மேல் நடந்து சென்றால் கூட உடைந்து விடும் அளவுக்கு இருக்கிறது. இன்னும் சில இடங்களில் தரமற்ற குழாய்கள், அதற்குள் உடைபட்டு கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். 

இது குறித்து இந்த பகுதியின் (12வது வார்டு) முன்னாள் கவுன்சிலர் அமீது கான் அவர்கள் நம்மிடையே பேசும் போது "முன் அனுமதி என்கிற பெயரில், ரூ.280000 திட்ட மதிப்பீட்டில், அவசர கோலத்தில் போடப்பட்டு இருக்கும் இந்த குழாய்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது தான், மக்களுக்கு உண்மை விளங்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால் இப்போதே அதன் தரம் பல்லை இளிக்க ஆரம்பித்து விட்டது. முறையாக ஆழப்படுத்தி தோண்டாமல் ஜே சி பி இயந்திரத்தை வைத்து அதிரடி வேலை செய்து முடித்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் அவ்வாறு இல்லை. அதே போல் இடையிடையே கட்டப்பட்ட  கழிவு நீர் சுத்தம் செய்யும் தொட்டிகள் செங்கலால்  கட்டப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் தரமில்லாத லோக்கல் உறைகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

கழிவு நீர் ஓடுவதற்கு முறையான வாட்டமும்  வைக்கப்படவில்லை. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செய்வதால் வருங்காலத்தில் பொதுமக்கள் எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த வார்டு கவுன்சிலரும், நகராட்சி நிர்வாகமும் புரிந்து செயல்பட வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

2 comments:

 1. கீழக்கரை அலி பாட்சா9 November 2013 at 18:34

  கீழக்கரை நரகாட்சியால் மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப்பணிகள் நடக்கா விட்டாலும் ஓட்டு போட்ட் மக்களுக்கு வேதனை. நடந்தாலும் வேதனை தான் மிச்சம்.அதற்கு இப் பதிவே ஒரு கண்ணாடி. ஆனால் நிர்வாகத்திற்கோ கொள்ளை மகிழ்ச்சி, ம்டி நிறைய பணம்.என்ன கொடுமைடா இது சவுக்கடி சாவன்னா?

  இச்செய்தி மக்களுக்கு எட்டு முன்பே சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது போய் இருக்கும்.ஒப்பந்தப் பணமும் பைசாபா பாக்கி இல்லாமலும் போய் சேர்ந்திருக்ககும்.

  அட கொக்கா,ரூ.2,80.000-மாம்.முதல் குடிமகள் இதை இன்னும் பார்வை இடவிலையா? என்ன இடக்கு மடக்கு பதி சொல்லப் போகிறார்கள்?வேலை நடந்த நேரத்தில் பகுதி மக்கள் பிரதிநிதி எந்த தோட்டத்திற்கும் பட்டையில் மஞ்ச சோறும், கருவாட்டு ஆணமும் சாப்பிட் போய் விட்டார்களா?

  கீழை இளையவனே, புண் பட்ட மனதிற்கு ஆறுதலாக இருக்க, முதல் குடிமகளின் பதிலை பெற்று பதிவு தர கருணை காட்டுவீராக.

  ReplyDelete
 2. கீழக்கரை அலி பாட்சா9 November 2013 at 18:37