தேடல் தொடங்கியதே..

Friday, 8 November 2013

கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் - 10.11.2013 அன்று நடைபெறுகிறது !

கீழக்கரையில் நவம்பர் 10 ஆம் தேதி பயங்கராவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமனையினருடன் இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும் 10.11.2013 அன்று (ஞாயிற்றுக் கிழமை) கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடை பெற இருக்கிறது. இந்த முகாமினை INTJ மாவட்ட தலைவர் முசம்மில்ஹார் தலைமையில், கீழக்கரை நகர் மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் துவங்கி வைக்கிறார்.இந்த முகாமில் தொற்றில்லா நோய்களை கண்டறியும் இலவச முகாமும் நடை பெறுகிறது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கபடுகிறது. இந்த நல்ல நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment