தேடல் தொடங்கியதே..

Thursday 29 August 2013

கீழக்கரை நகராட்சிக்கு நன்றி - வழிந்தோடிய சாக்கடை வாருகாலுக்கு 'அணை கட்டிய ஆணையருக்கு' நன்றி.. நன்றி.!

கீழக்கரை நகரின் பல தெருக்களில், இன்னும் வாருகால்கள் உயர்த்திக் கட்டப்படாததால் வழிந்தோடும்  சாக்கடை கழிவு நீரால் பெரும் சுகாதரக் கேடு நிலவி வருகிறது. இதற்காக 50 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டும், ஒப்பந்ததாரரால் பணிகள் செய்யப்படாமல், (என்ன காரணத்தினாலோ..?) பாதியிலேயே விடப்பட்டு வேலைகள் முடங்கிக் கிடக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் நிறைந்த கீழக்கரை பிரபுக்கள் தெரு இஸ்லாமி பைத்துல் மால் எதிரே, மிக மோசமான நிலையில் இருக்கும் சாக்கடை வாருகளில் பலர் விழுந்து எழுவது வாடிக்கையாகி வந்தது. இந்நிலையில் வழிந்தோடிய சாக்கடை வாருகாலுக்கு, மணல் மூட்டைகளை கொண்டு, 'அணை கட்டிய ஆணையருக்கு' பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். 



இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் ஜவாஹிருல்லா MLA பொது மக்களுடன் சந்திப்பு - முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்பட விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி ! 


இது குறித்து 'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை' நிர்வாகி நிஸார்தீன் அவர்கள் கூறும் போது " கடந்த ஜூன் மாதம், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர். ஜவாஹிருல்லா அவர்கள் கீழக்கரை நகருக்குள் நேரடி ஆய்வு மேற் கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது இந்த அபாய வாருகாலை, உடனடியாக உயர்த்திக் கட்டி மூடி போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இது போன்ற 10 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது

ஒரு மாத கால அவகாசத்திற்குள், பொது மக்களிடம் கேட்டறியப்பட்ட அனைத்து புகார்களையும், கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற, நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். அதற்கு நகராட்சி ஆணையராலும் உறுதி மொழி தரப்பட்டது. ஆனால் இன்றைய தேதி வரை சட்ட மன்ற உறப்பினர் அவர்களால் பெறப்பட்ட புகார்கள், ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை

இருப்பினும் வழிந்தோடிய சாக்கடைக்கு ஒரு அணையாவது கட்டினார்களே என்று வேறு வழியில்லாமல் பாராட்டத் தான் தோன்றுகிறது. சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி.. கீழக்கரை நகராட்சிக்கு நன்றி.." என்று பல்வேறு ஆதங்கங்களுக்கிடையே நன்றி தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :
  • Mohamed Nageem Marika எதை எதையோ சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்,தனி தாலுகா கொண்டு வருவோம், இரயில் பாதை அமைப்போம், பாதால சாக்கடை அமைப்போம், அடிக்கடி துப்புரவு செய்வோம், கொசுமருந்து அடிப்போம், பிளிச்சிங்க் பவுடர் போடுவோம், சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்துவோம் சொல்லி எத்தனைகாலம்தான் இந்த மக்களை ஏமாற்றுவார்களோ?
    சும்மா வெள்ளையும் சொல்லையும்மாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டுதான் இருக்குறார்களே தவிர ஒன்னும் உறுப்படியா நட்ந்தாதாக தெரியவில்லை, பாவம் எம்மக்கள் எப்போதுதான் எழுவார்களோ? அதுவும் மிகுவிரைவில் நடக்கும் எம்மக்கள் வீரு கொண்டு எழுவார்கள் அப்போது வாக்கு கேட்டவர்கள் வெற்றி பெற்றவர்கள் தாங்க மாட்டர்கள்

    இது என்னுடைய ஊரைப்பார்க்கும் போது என் உள்ளத்தில் எழுந்த ஆதங்கம், யாரையும் புண்படுத்தி காட்டுவத்ற்கு அல்ல! நல்லவர்களாக இருந்தால் இதை பற்றி வருத்த படுவார்கள்
  • சின்னக்கடை நண்பர்கள் கீழக்கரை நகரின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டும் அற்புதமான பதிவு.. இனி கீழக்கரை நகராட்சி ஆணையர், வழிந்தோடிய சாக்கடை வாருகாலுக்கு 'அணை கட்டிய ஆணையர் அய்யூப் கான் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்.
  • Mohamed Quraishi mannu mootai specialista namma commisionaruuuu
  • Mohamed Nageem Marika அன்பு சகோதர்களே! மற்றும் சகோதரிகளே!!

    ஓட்டு கேட்கும் போது அதை செய்வோம் இதை செய்வோம் என்று சொல்கிறார்கள், வெற்றி பெற்றவுடன் அதை மறந்து வெறும் குரல் மட்டும் கொடுக்கிறார்கள் என்று ஆதங்கம் படும் மக்களே இதற்கெல்லாம் யார் காரணம் சற்று சிந்தித்து பார்த்தீர்கள் என்றால் இதற்கெல்லாம் நீங்களூம் உங்கள் அரியாமையும் தான் என்று உணர்வீர்கள்.

    இன்றே உறுதி மொழி எடுங்கள், ஓட்டு கேட்பவர்கள் யாரக இருந்தாலும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை எழுத்து மூலமாக எழுதி தருபவர்களுக்குதான் எங்களது ஓட்டை போடுவோம் இல்லை யென்றால் 49 ஒ பயன் படுத்துவோம் என்று சொல்லுங்கள்(49 ஒ என்றால் நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை எனது உரிமையை நீதி ம்ன்றத்திடம் கொடுக்கிறேன் என்றாகும் என நினைக்கிறேன்)

    எனவே இந்த மாதிரி செயவதற்கு இன்றே உங்களுக்கும் உறுதி மொழி எடுங்கள், வாழ்க வளர்க வளமுடன்!!
  • Abu Faizel பணம் என்னாச்சு .............. மண்ணு மூட்டையாச்சு............. இதுதாண்ட நல்லாட்ச்சி
  • Mohamed Irfan நகராட்சின் அதிவேகமான அணைக்கட்டுமான பணிகூட ஜனநாயக போரட்டம் அறிவித்த அடுத்த நாள் தான். இந்த சம்பவத்தை என் நண்பன் சாலி உசையிடம் குறிபிட்டேன். வேலை பழுவில் மறந்து விட்டார். எனது கருத்து நல்லவிசயம் எதையும் சாதிக்க வேண்டும் என்றால் ஜனநாயக அடிப்படையில் வீதிக்கு வர வேண்டும் இல்லை நம் கண்முன்னால் செய்யபடும் ஊழ ஒரு போது தடுக்க முடியாது.......
  • Mohamed Irfan நண்பன். சாலி உசைன் பல அரசு அலுவலகங்களை ஏறி வருகிறார். அவர் வீட்டுவசதிகாக அல்ல... கீழக்கரை மின் வாரிய அலுவலக அருகில் உள்ள டாஸ் மார்க்கை அகற்ற கோரி ஆனால் இதற்காக இதுவரை எந்த ஜனநாய அறப் போர் நடக்க வில்லை நமது ஊர் நன்மைக்காக எடுக்கும் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று முன்வரும் அனைத்து நல்ல உள்ளங்களும் பதிவு செய்யவும் குறைந்தது 10,000 பேரிடம் இருந்து கருத்தை எதிர்பாக்கிறேன். இதுவே கலத்தில் போராடும் சமுக ஆர்வளர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும்..................
  • Hussain Jahangeer ஐயா சமூகநல ஆர்வலர்களே,அணை கட்டப் பட்டிருக்கும் அந்த மூடைகளை கொஞ்சம் விரித்து தான் பாருங்களேன்.ஒரு வேளை அரசின் விசாரணைக்கு பயந்து கொள்ளையடித்த ஊழல் பணத்தை மூட்டை கட்டி போட்டிருந்தால்???
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இந்த பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு அணை கட்டும் போது தற்காலிக ஏற்பாடு என்று தான் எண்ணி இருந்தோம். ஆனால் இது தான் நிரந்தரமாக இருக்கும் போலத் தெரிகறது. இதற்கும் எவ்வளவு பில்லை போட்டு பணம் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. இதுவெல்லாம் மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய கடமை இல்லையா.

    நகராட்சி நிர்வாகத்தினரே. உங்கள் உடன் பிறந்த சொந்த பந்தங்கள் இதில் இடறி விழுந்து கை கால் முறிந்தால் தான் செய்வீர்களா? இந்த போட்டாவில் தெளிவாக தெரிகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்தான இடம் என்று. எதிரே வரும் வாகனங்கள் வலது பக்கம் சற்று இறக்கினால் போதும். வாகனம் குடை சாய்ந்து எதிரே உள்ள வீட்டுக்குள் புகுந்து விடும். இறைவா எங்களை காப்பாற்று..

2 comments:

  1. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete
  2. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
    கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

    ReplyDelete