தேடல் தொடங்கியதே..

Tuesday 6 August 2013

கீழக்கரை '9 பங்களா' அருகாமையில் ஆபத்தை எதிர் நோக்கி இருக்கும் 'அபாய மரம்' - விரைந்து வெட்ட வேண்டுகோள் !

கீழக்கரை நகரில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப் போன மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சின்னகடை தெரு கருவாட்டுக் கடை அருகாமையில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரம், முஸ்லீம் பஜாரில் லெப்பை மாமா டீக் கடை அருகே பேயாடும் பட்ட மரம் என்று நீளும் பட்டியலில் இப்போது புது வரவாக 9 பங்களா அருகாமையில் இருக்கும் பட்டுப் போன வேப்ப மரமும் சேர்ந்துள்ளது. 



இது குறித்து நாம் ஏற்கனவே கடந்த வருடம் "கீழக்கரையில் விழ இருக்கும் மரங்களால் எழ இருக்கும் ஆபத்துக்கள் - விரைந்து வெட்டக் கோரி நூதன முறையில் கண்டனம் !" என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.


இதனால் இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனுடைய கிளைகள் மின் கம்பங்களை உரசியவாறு செல்வதால் பேராபத்துக்களை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், உடனடியாக வெட்ட வேண்டி சமூக ஆர்வலர்கள் பலர் மனுக்கள் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பாக இது வரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது ஏன் என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.


யார் தலையில் விழுந்தால் நமக்கென்ன..? என்று எண்ணியவாறு இந்த சாலையை கடந்து செல்லும் கணவான்கள், நகராட்சி ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இது போன்று நகருக்குள் இருக்கும் பட்டுப் போன மரங்கள் அனைத்தையும் தாமதிக்காமல், மனித உயிரின் மகத்துவம் அறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் பொதுமக்கள் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

No comments:

Post a Comment