தேடல் தொடங்கியதே..

Tuesday, 6 August 2013

கீழக்கரையில் TNTJ சார்பாக நடை பெறும் நோன்புப் பெருநாள் 'திடல் தொழுகை' அறிவிப்பு !

கீழக்கரை நகரில் வருடம் தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 500 பிளாட், தெற்குத் தெரு, கிழக்குத் தெரு உள்ளிட்ட மூன்று பகுதிகளில், நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பேரு நாள் தினங்களில் நபி வழி 'திடல் தொழுகை' நடை பெற்று வருகிறது.

இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பினை TNTJ கீழக்கரை கிளை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று திடல் தொழுகை மைதானங்களிலும் சரியாக காலை 7.30 மணிக்கு தொழுகை துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


கீழக்கரையில் மகத்தான மாற்றமாக தற்போது கிழக்குத் தெரு, கடற்கரைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு முஹல்லாக்களிலும், நபி வழி திடல் தொழுகையை சிறப்பாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment