தேடல் தொடங்கியதே..

Saturday, 10 August 2013

கீழக்கரை கிழக்குத் தெருவில், TNTJ சார்பாக நடை பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை - நூற்றுக் கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர் !

கீழக்கரை கிழக்குத் தெரு பால் பண்ணை அருகில் நேற்று பெருநாள் தினத்தன்று (09.08.2013), சரியாக காலை 7.30 மணிக்கு நடை பெற்ற திடல் தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். இதே நேரத்தில் 500 பிளாட் டீச்சர்ஸ் காலனி அருகாமையில் TNTJ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திடலிலும், தெற்குத் தெரு அக்சா நகர் அருகாமையில் அமைக்கப்பட்டு இருந்த திடலிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது.  கிழக்குத் தெருவில் பெருநாள் பேருரையை சகோதரர். சத்தார் அலி அவர்களும், தெற்குத் தெருவில் சகோதரர்  ஸுஜா அலி அவர்களும் ஆற்றினார்கள். இந்த வருடம் கீழக்கரை நகரில் பெரும்பாலான ஜமாத்தார்கள், திறந்த வெளித் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment