தேடல் தொடங்கியதே..

Sunday 4 August 2013

கீழக்கரையில் இடி மின்னலுடன் 'திடீர்' மழை - குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று (04.08.2013) மாலை 5.30 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடைவிடாமல் வீசிய சில்லென்ற குளிர் காற்றுடன் பெய்யத் துவங்கிய சாரல் மழை 6.15 மணி முதல் மிதமான மழையாக பெய்து வருகிறது. இதனால் கோடையின் தாக்கத்தால் புழுங்கித் தவித்து வந்த நோன்பாளிகள், பொதுமக்கள்  பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழைக்கு முன்னதாக மாலை 6 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 

கீழக்கரை நகரில் திடீரெனெ இந்த மழையின் காரணமாக, முன்னேற்பாடுகள் இன்றி வெளியே சென்ற மக்கள், கொஞ்சம் சிரமத்துக்குள்ளாயினர். சாலைகளில் மூடி போடப்படாமல்  திறந்து கிடக்கும் சாக்கடை வாருகால்கள் மழை நீருடன் வழிந்து தெருவெங்கும் மணம் பரப்பியது. தற்போது மின்சாரம் நிறுத்தப்பட்டு நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இன்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FACE BOOK COMMENTS : 

Like · · Unfollow Post · Share · Edit

  • A.s. Traders Masha Allah...
     
  • Riffan Zyed Masha Allah
     
  • Siddique Mas Makkaku madhomala manukkum mahulchi masha alah
     
  • Keelakarai Ali Batcha இன்று மாலை கீழக்கரை நகர் மழை மேகங்களுடன் இருந்த மனம் கொள்ள காட்சிக்கு மேலே உள்ள படக் காட்சிகளே சாட்சி. இருப்பினும் மழை ஏமாற்றி விட்டது. இது போன்ற மழை நகரின் சுகாதார கேட்டிற்கு பால் வார்த்தது போல் இருக்கிறது.

    வியாதிகள் பரவாமல் இருக்க இன்று இரவு கனத்த ம
    ழை பெய்து சாலையில் உள்ள சகதிகள் கொண்டு செல்லவும்,வற்றிப் போன கிணறுகளை பார்த்து பெண்கள் வடிக்கும் கண்ணீர் பன்னீராக மாறும் வகையில் நிலத்தடி நீர் சுரக்கும் வகையில் மழை என்னும் ரஹ்மதை பொழிய இரு கரம் ஏந்தி ஏக நாயனிடம் அனைவரின் கல்புகளும் அழுத நிலையில் இறைஞ்சுவோமாக.ஆமீன்.நாளைய 27-ம் இரவு புனித மிக்க லைலத்து கதர் இரவில் வல்லவனிடம் கேட்கும் துவாவில் மழைக்காகவும் இறைஞ்சுவேமாக. இன்ஷா அல்லா
     
  • Sheak Meeran அல்ஹம்துலில்லாஹ்
     
  • கீழை ரோஜா யா அல்லாஹ்.. இன்னும் உன் அருள் மழையை எங்கள் ஊருக்கு இறக்கித் தா
     
  • Fouz Ameen இன்றும் (05/08/2013) இதே நேரத்தில் குளுமையாக, கொஞ்சம் மழை பெய்து நோன்பாளிகள் உள்ளங்களை குளிர்வித்தது. அல்ஹம்துலில்லாஹ்
     
  • Jagadhesh Siva maasha allah.................!

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா4 August 2013 at 22:40

    இன்று மாலை கீழக்கரை நகர் மழை மேகங்களுடன் இருந்த மனம் கொள்ள காட்சிக்கு மேலே உள்ள படக் காட்சிகளே சாட்சி. இருப்பினும் மழை ஏமாற்றி விட்டது. இது போன்ற மழை நகரின் சுகாதார கேட்டிற்கு பால் வார்த்தது போல் இருக்கிறது.

    வியாதிகள் பரவாமல் இருக்க இன்று இரவு கனத்த மழை பெய்து சாலையில் உள்ள சகதிகள் கொண்டு செல்லவும்,வற்றிப் போன கிணறுகளை பார்த்து பெண்கள் வடிக்கும் கண்ணீர் பன்னீராக மாறும் வகையில் நிலத்தடி நீர் சுரக்கும் வகையில் மழை என்னும் ரஹ்மதை பொழிய இரு கரம் ஏந்தி ஏக நாயனிடம் அனைவரின் கல்புகளும் அழுத நிலையில் இறைஞ்சுவோமாக.ஆமீன்.நாளைய 27-ம் இரவு புனித மிக்க லைலத்து கதர் இரவில் வல்லவனிடம் கேட்கும் துவாவில் மழைக்காகவும் இறைஞ்சுவேமாக. இன்ஷா அல்லா

    ReplyDelete