தேடல் தொடங்கியதே..

Tuesday, 22 October 2013

கீழக்கரையில் இன்று (22.10.2013) நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் - கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு !

இராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இராமாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகியோருடன் இணைந்து கீழக்கரை ரோட்டரி சங்கத்திய்னர் ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் IOL லென்ஸ் பொருத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (22.10.2013) காலை 9 மணிக்கு துவங்கி, பிற்பகல் 1 மணி வரை, கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாமை கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.M.H.செய்யது ராசிக்தீன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் ஏராளமான கண் பதிப்புடையோர் கலந்து கொண்டு, ஆலோசனை பெற்று வருகின்றனர். 


இது குறித்து இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளர். ரோட்டரி சங்கத்தின் செயலாளர். சுப்ரமணியன் அவர்கள் கூறும் போது "இந்த முகாமில் கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், மாறு கண் பிரச்சனைகள், போன்றவைகள் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் கண் புரை நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி லென்ஸ் இலவசமாக பொருத்தப்பட உள்ளது. கண் புரை ஆபரேசன் செய்ய மருத்துவமனைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவுகள், உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை, சொட்டு மருந்து , கருப்பு கண்ணாடி அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. கண் பாதிப்புள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் உதவி கண் மருத்துவர் டாக்டர் முகத்து நசீம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள் நாகராஜ், டேனியல் ஜோசப், வாசுதேவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர். சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவர். பேராசிரியர். A.அலாவுதீன், (முதல்வர் - முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி), கீழக்கரை ரோட்டரி சங்க அங்கத்தினர்கள் ரோட்டரியன். ஹசன் (அல்-நூர் ஆப்டிகல்ஸ்) ராஜா, சதக்கத்துல்லாஹ், மூர் டிராவல்ஸ் ஹசனுதீன், செய்யது அஹமது, சுந்தர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.  

இந்த நல்ல மருத்துவ முகாமை, சிகிச்சை தேவைப்படுவோர் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment